தெஹரான், மார்ச் 10 அமெரிக்கா – இஸ்ரேலு டனான போரை நிறுத்த, ஈரான் அதிபர் 3 நிபந்தனைகளை விதித்துள் ளார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா காமேனி உட்பட 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப ்பட்டுள் ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்துவது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானுடன் ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத் தியது.
இதையடுத்து எக்ஸ் தளத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஈரான் உறுதியுடன் இருக்கிறது. அமெரிக்கா – இஸ்ரேலால் தொடங்கப்பட்ட போரை நிறுத்துவதற்கு ஒரே வழி ஈரானின் சட்டப்படியான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்.
போர் மூலம் ஏற் படுத்திய சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என பன்னாட்டு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்த 3 நிபந்தனைகளை ஏற்றால், ஈரான் போரை நிறுத்தும்” என கூறியுள்ளார்.
