- 2004 ஆம் ஆண்டின் விளக்கக் கடிதத்தைப் பயன்படுத்தி, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெற்றோரின் சம்பளத்தையும் வருமான வரம்பிற்குள் கணக்கிட்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை தவறானது.
- 1993 ஆம் ஆண்டின் கொள்கைப்படி, சமூகத்தில், பெற்றோரின் முன்னேறிய நிலையைத் தீர்மானிக்க அவர்களின் பதவி மற்றும் பணி நிலையைத்தான் (Status) முதன்மையாகப் பார்க்க வேண்டும். வருமானம் என்பது ஒரு கூடுதல் காரணி மட்டுமே!
- அரசு வெளியிடும் ஒரு சாதாரண விளக்கக் குறிப்பு (Clarificatory Instructions), அரசின் அடிப்படையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையையோ அல்லது விதிகளையோ மாற்றிவிட முடியாது.
- பெற்றோரின் பதவியைக் கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாகச் சம்பளத்தை மட்டும் வைத்து கிரீமிலேயரைத் தீர்மானிப்பது சட்டப்படி செல்லாது.
- OBC கிரீமிலேயர் விதிகளை அரசு வழிகாட்டுதல்களின்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியுள்ளவர்களுக்கு ‘கிரீமிலேயர்’ அல்லாதோர் என்ற தகுதி மறுக்கப்படக் கூடாது.
- பெற்றோரின் வருமானம் எதன்மூலம் வருகிறது, அவர்களின் பணி நிலை என்ன என்பதைச் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். வருமான அளவுகோலைத் தவறாகப் புரிந்துகொண்டு இடஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது.
- ஒரு போட்டியாளர் உண்மையில், ‘கிரீமிலேயர் அல்லாத’ (‘Non-Creamy Layer’) பிரிவைச் சேர்ந்தவர் என்றால், அவருக்கு உரிய பணி ஒதுக்கீட்டையும், பலன்களையும் அரசு வழங்க வேண்டும்.
- ஏற்கெனவே நிரப்பப்பட்ட பணியிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தகுதியுள்ள இந்தப் போட்டியாளர்களுக்காகத் தேவைப்பட்டால் கூடுதல் (Supernumerary) பணியிடங்களை அரசு உருவாக்கலாம்.
- ஒன்றிய அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றங்கள் (சென்னை, டில்லி, கேரளா) மற்றும் தீர்ப்பாயமும் வழங்கிய சாதகமான தீர்ப்புகளை உறுதி செய்தது.
- ஆறு மாத காலத்திற்குள் இந்தப் போட்டியாளர்களின் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க, ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
Leave a Comment
