வழிகாட்டும் திராவிட மாடல் அரசு! அயலகத் தமிழர்களுக்கென தனித்துறை மற்றும் நல வாரியம் அமைப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 12- 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனித்துறை மற்றும் நல வாரியம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கும் தாய் மண்ணிற்குமான உறவை மேம்படுத்தவும் ‘‘அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை’’ என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சராக ஆவடி நாசர் இத்துறையை நிர்வகித்து வருகிறார்.

நல வாரியம் மற்றும்
உறுப்பினர் சேர்க்கை

அயலகத் தமிழர்களுக்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட பிரத்யேக நல வாரியம் அமைக்கப் பட்டுள்ளது.

பதிவு முறை: 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள் ‘என்.ஆர்.தமிழ்’ (NR Tamil) இணையதளத்தில் ரூ.200 செலுத்தி உறுப்பினராகலாம்.

அடையாள அட்டை: பதிவு செய்பவர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் அரசு வழங்கும் சலுகைகள் உறுதி செய்யப்படுகின்றன.

பதிவு பெற்ற உறுப் பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டில் பணியின் போது உயிரிழக்கும் குறைந்த வருமானம் கொண்ட தமிழர்களின் குழந்தை களுக்குக் கல்வி மற்றும் திருமண நிதியுதவி அளிக்கப்படுகிறது.

போர் சூழலால் தாயகம் திரும்புவோர் சுயதொழில் தொடங்க ரூ.2.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

சட்ட உதவி: வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் அல்லது விசா தொடர்பான சிக்கல்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி அயலகத் தமிழர் தினமாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தை கள் தமிழ் மொழியைக் கற்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் பிரத்யேகப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய முன்னெடுப்புகளால், புலம் பெயர்ந்த தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *