கடந்த 6 ஆண்டுகளில் 1,050 பயங்கரவாத தாக்குதல்களில் பொது மக்கள் 243 பேர் மரணம் மக்களவையில் அரசு தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 12- நாடாளுமன்றத்தின் மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ககோளி கோஷ் தஸ்திதார் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு ஒன்றிய உள்விவகாரத் துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து வடிவில் நேற்று (11.3.2026) பதில் அளித்துள்ளார்.

அதில், நாட்டில் 2017 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் 1,050 பயங்கரவாத தாக்குதல்கள் அல்லது சம்பவங்கள் நடந்துள்ளன.

இதில் நாடு முழுவதும் பொதுமக்களில் 243 பேர் மரணம் அடைந்துள்ளனர். 599 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினரில் 288 பேர் மரணம் அடைந்தனர். 802 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களையும் அவர் வெளியிட்டார். இதன்படி, 687 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 616 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *