திருச்சி, மார்ச் 11- அரவிந்த் போலீஸ் அகாடமி மற்றும் மக்மாஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப் போட்டியில், திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது அபாரத் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி திருச்சி விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நகரின் முன்னணிப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கடும் போட்டிக்கு இடையே, பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வர்ணங்களால் காகிதத்தில் ஜாலங்கள் செய்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர்.
வெற்றி வாகை சூடியவர்கள்
இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்:
மாணவி எம்.சிவசிறீ வைரம்: மினி சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்து அசத்தினார்.
மாணவி,வி.எம். அஃப்ரா பாத்திமா சப்-ஜூனியர் பிரிவில் மிகச்சிறந்த ஓவியத்தைத் தீட்டி முதலிடம் வென்றார்.
மாணவர் எம். வருண் வைரம் சப்-ஜூனியர் பிரிவில் தனது திறமையால் இரண்டாமிடம் பெற்றார்.
மாணவி எஸ்.ஜீவமித்ரா சப்-ஜூனியர் பிரிவில் நுணுக்கமான ஓவியத்தைப் படைத்து இரண்டாமிடம் வென்றார்.
சாதனை படைத்த மாண வர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. பள்ளிக்குப் பெருமை சேர்த்த இந்த வருங்கால ஓவியர்களைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணித் தோழர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். மாணவர்களின் இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.
