இந்தியர்கள் நல்ல நடிகர்கள்; ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதி! – அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், மார்ச் 10– உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும், 30 நாள்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கடலிலுள்ள கப்பல்களில் சிக்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் 6.3.2026 அன்று பேசியதாவது:

“உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடலில் உள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க நமது கூட்டாளிகளான இந்தியாவை அனுமதிக்க அமெரிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள். தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என நாம் கூறியவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ரஷ்யாவுக்குப் பதிலாக அமெரிக்க கச்சா எண்ணெய்யை அவர்கள் வாங்கவுள்ளனர். ஆனால், எண்ணெய் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதால் அதைத் தீர்ப்பதற்காக ரஷ்ய எண்ணெய்யை வாங்க நாம் அனுமதி வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *