கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* குடியரசுத் தலைவரை அவமதித்தது யார்? நானா? இல்லை பிரதமர் மோடியா? எல்.கே.அத்வானிக்கு குடியரசுத் தலைவர் முர்மு  பாரத ரத்னா விருது வழங்கிய போது, பிரதமர் மோடி உட்கார்ந்து உள்ள ஒளிப்படத்தைக் காட்டி மம்தா ஆவேசம்.

* நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு: ஈரான் போர், சமையல் கேஸ் விலை உயர்வு குறித்து பிரச்சனை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வந்தே மாதரம் பாடலுக்கு பாஜக கூட்டணி கட்சி கடும் எதிர்ப்பு: வந்தே மாதரம் தொடர்பான ஒன்றிய அரசின் உத்தரவு, “பிரிவு 371(A) இன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள நாகா கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைக்கு நேரடி அச்சுறுத்தல்” “அத்தகைய பாடலை வலுக்கட்டாயமாக திணிப்பது எங்களுக்கு அந்நியமானது, நட்பற்றது மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தல்…” என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஆளும் நாகா மக்கள் முன்னணி (NPF) எதிர்ப்பு.

* சத்தீஸ்கரில் அபின் பண்ணை –  உரிமையாளர் பாஜக தலைவர் கைது. சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் 5 ஏக்கர் நிலத்தில் அபின் பயிரிட்டதாகக் கூறப்படும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ஒருவர் தனது இரண்டு உதவியாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அந்தத் தலைவர் தற்போது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கின் விரைவான விசாரணை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தபடி விசாரணை வெறும் 125 நாட்களில் முடிக்கப்பட்டது. மூன்று குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விரைவாக நீதி வழங்கப்பட்டது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகளைத் தண்டிப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்தியதற்கு அனைவரும் பாராட்டு..

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *