பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், மார்ச் 8 ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்நாடு நிபந்தனையற்ற முறையில் சரணடைவது ஒன்றே போரை நிறுத்த ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் போர் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவு தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டு நகரங்களை தாக்கி வருகிறது. இது உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்நாடு நிபந்தனையற்ற முறையில் சரணடைவது ஒன்றே போரை நிறுத்த ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது.

மேலும் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து
52,360 இந்தியர்கள் இந்தியா திரும்பினர்

மும்பை, மார்ச்.8 மேற்கு ஆசியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணியை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 52,360 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.

ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) இணைந்து இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. போர் பதற்றம் காரணமாக சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ள நிலையிலும், பகுதி அளவிலான விமானச் சேவைகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *