தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பண்பாட்டின் அடையாளமாகவும், உலகப் பொதுமறையைத் தந்தவருமான திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை அவருக்குப் பரிசளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயரிய சிந்தனையோடும், வள்ளுவத்தின் வாழ்வியல் நெறிகளோடும் உங்களின் புதிய பயணம் அமையட்டும். புதிய பொறுப்பில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறக்க வாழ்த்துகிறேன்!”
