மக்களை நிலைகுலையச் செய்யக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக முன்னெடுத்து, அதற்குரிய பரிகாரத்தைத் தேடி, மக்கள் மத்தியிலே அதனை விளக்கிக் கூறுபவர் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி!
எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெரியார் திடலுக்கு உண்டு!
எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெரியார் திடலுக்கு உண்டு!
சென்னை, மார்ச் 4 ‘‘மக்களை நிலைகுலையச் செய்யக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக முன்னெடுத்து, அதற்குரிய பரி காரத்தைத் தேடி, மக்கள் மத்தியிலே அதனை விளக்கிக் கூறி, அதனால் ஏற்படக்கூடிய இடைஞ்சல்கள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவித்து, அத்தகைய தவறான அரசியல் கொள்கையை, தேசிய கொள்கையாக கொண்டு வரக்கூடிய, தவறான கொள்கையை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் நமது வீரமணி அய்யா அவர்கள். இதுதான் பெரியார் வழி – தந்தை பெரியார் அவர்கள் காட்டிய வழி இதுதான்! எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெரியார் திடலுக்கு உண்டு’’ என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள்.
- மக்களை நிலைகுலையச் செய்யக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக முன்னெடுத்து, அதற்குரிய பரிகாரத்தைத் தேடி, மக்கள் மத்தியிலே அதனை விளக்கிக் கூறுபவர் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி! எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெரியார் திடலுக்கு உண்டு!
- ‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
- தேசிய அளவிலான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய கூட்டம்தான்!
- ‘தேசிய கல்விக் கொள்கை’யல்ல – தேசியத்தை சுக்கு நூறாக்கக் கூடிய திட்டம்!
- அய்யா வீரமணி அவர்களுடைய அறிக்கைகள், அவருடைய வெளியீடுகள் நிறைய உதவி செய்திருக்கின்றன!
- மக்கள் மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறான கொள்கை!
- நிரந்தரமான கண்டனத்துக்கு உரியதாக மாறி இருக்கிறது!
- இந்தியாவை திருப்பிப் போட்டு மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது!
- ஹிந்துத்துவா என்கிற கொள்கையைத் திணிப்பதற்கான ஒரு பெரும் முயற்சி!
- ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ காண்பதுதான் இந்தியா!
- உங்கள் முயற்சி வெல்ல, அனைத்து வகையிலும் ஒத்துழைப்போம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில், கடந்த 18.2.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
இன்றைய நன்னாளில் ‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா – மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா?’’ என்கின்ற வினாவை எழுப்பி, அதற்கான ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிற தமிழர் தலைவர் நமது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களே,
வரவேற்புரையாற்றி சிறப்பித்திருக்கின்ற கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யா அவர்களே, கண்டன உரையாற்றிச் சென்றிருக்கின்ற அருமைத் தோழர் வீர பாண்டியன் அய்யா அவர்களே, கண்டன உரையாற்றிச் சென்றிருக்கின்ற பேராசிரியர் ஹாஜா கனி அவர்களே, எனக்கு முன்பு உரையாற்றிச் சிறப்பித்திருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருமைச் சகோதரர் தோழர் நாகை மாலி அவர்களே,
எனக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழ கத்தின் சார்பில், இங்கே வருகை புரிந்து, கண்டன உரையாற்ற அமர்ந்திருக்கின்ற வழக்குரைஞரும், பெருமரியாதைக்கும் உரிய ஆர்.எஸ்.பாரதி அய்யா அவர்களே, நன்றியுரை கூற இருக்கின்ற அருமைச் சகோதரர் குமாரதேவன் அவர்களே, திரளாக கூடியிருக்கிற அருமைச் சகோதரர்களே, சகோதரிகளே! என்னோடு உடன் வந்திருக்கிற இந்தியன் முஸ்லிம் லீக்கினுடைய மாநிலப் பொதுச்செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் உள்ளிட்ட அருமை நண்பர்களே!
தேசிய அளவிலான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய கூட்டம்தான்!
இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அய்யா வீரமணி அவர்கள் முதலில் நமது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள். நமக்குத் தெரிந்து இந்த மன்றத்தில், பெரியார் திடலில் ஒவ்வொரு கூட்டமும் நடந்த நேரத்தில் எல்லாம், தேசிய அளவிலான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய கூட்டங்களாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
‘தேசிய கல்விக் கொள்கை’யல்ல – தேசியத்தை சுக்கு நூறாக்கக் கூடிய திட்டம்!
உங்களுக்கெல்லாம் தெரியும் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, ‘நேஷனல் எஜுகேஷனல் பாலிசி’ – ‘தேசிய கல்விக் கொள்கை’ என்று ஒன்றை உருவாக்கி, ஒரு மிகப்பெரிய குழப்பத்தைக் கல்வித்துறையிலே செய்வதற்கான முயற்சியை ஒன்றிய அரசு செய்த நேரத்தில், ‘நேஷனல் எஜுகேஷனல் பாலிசி’ அல்ல இது; தேசத்தைச் சுக்குநூறாக்கக் கூடிய பாலிசி என்று சொல்லி, இதே மேடையில் தான், இதே இடத்தில் தான் கூட்டத்தை நடத்தி, அதனுடைய தொடர்ச்சியாக தமிழ்நாடே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆக்கியது என்று நாம் அறிவோம்.
அய்யா வீரமணி அவர்களுடைய அறிக்கைகள், அவருடைய வெளியீடுகள் நிறைய உதவி செய்திருக்கின்றன!
தமிழ்நாடு மட்டுமல்ல, நேஷனல் எஜுகேஷன் பாலிசியை மற்ற மாநிலங்களும் எதிர்த்து, அதனை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அய்யா வீரமணி அவர்களுடைய அறிக்கைகள், அவருடைய வெளியீடுகள் நிறைய உதவி செய்திருக்கின்றன.
அது மாதிரி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், தேச மக்களை நிலைகுலையச் செய்யக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக முன்னெடுத்து, அதற்குரிய பரிகாரத்தைத் தேடி, மக்கள் மத்தியிலே அதனை விளக்கிக் கூறி, அதனால் ஏற்படக்கூடிய இடைஞ்சல்கள் என்ன என்பதை மக்களுக்குத் தெரிவித்து, அத்தகைய தவறான அரசியல் கொள்கையை, தேசிய கொள்கையாக கொண்டு வரக்கூடிய, தவறான கொள்கையை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் நமது வீரமணி அய்யா அவர்கள். இதுதான் பெரியார் வழி – தந்தை பெரியார் அவர்கள் காட்டிய வழி இதுதான்! எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், அதனைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் பெரியார் திடலுக்கு உண்டு என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் இன்றைய தினம், ஒன்றிய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய உத்தரவை எதிர்த்து இந்தக் கூட்டம் நடக்கிறது. என்ன உத்தரவு? அருமைச் சகோதரர்கள் இங்கே தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடம், கல்லூரி ஆரம்பிக்கிற நேரத்தில், ‘தேசிய பாடல்’ என்று, ‘வந்தே மாதரம்’ பாடல் பாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ கல்லூரிகள், எத்தனையோ பள்ளிகள், பொதுவாக முஸ்லிம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. முஸ்லிம் பள்ளிக்கூடத்தில் காலையில், முதலில் அவர்கள் ‘இறை வணக்கம்’ என்று குர்ஆனுடைய வசனங்களை எடுத்துச் சொல்வார்கள். அதற்குப் பிறகு, நமது தமிழ்நாட்டுடைய முறைப்படி, தமிழ் வாழ்த்தைப் பாடுவார்கள், தேசிய கீதத்தைப் பாடுவார்கள். இந்த முறையைத்தான் பின்பற்றி வரக்கூடிய ஒரு நிலைமை.
மக்கள் மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறான கொள்கை!
இப்பொழுது ஒன்றிய அரசு பிறப்பித்திருக்கிற இந்த உத்தரவிற்கு இணங்க, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் குர்ஆன் வசனங்களைப் பாட வேண்டிய அவசியம் கிடையாது, பாடக்கூடாது. அதற்குப் பதிலாக எதைப் பாட வேண்டும் என்று சொன்னால், ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட வேண்டும். அதற்குப் பிறகு தேசிய கீதமான ‘ஜனகணமன’ பாடலைப் பாடவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், இது சட்டமன்றம், நாடாளுமன்றம் என்பதோடு, அன்றாடம் நடக்கக்கூடிய இந்த முறையை மாற்றி, ஒரு புதிய கொள்கையை வகுத்து, மக்கள் மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறான கொள்கையை வெளியிட்டு இருக்கிறார்கள், உத்தரவாக! அந்த உத்தரவை எதிர்த்துத்தான் இந்தக் கண்டனக் கூட்டம் இன்று நடக்கிறது.
நிரந்தரமான கண்டனத்துக்கு
உரியதாக மாறி இருக்கிறது!
உரியதாக மாறி இருக்கிறது!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அய்யா வீரமணி அவர்கள் எடுத்து விளக்கிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அது கண்டனம் என்று வந்த பிறகு, அது மக்கள் மத்தியிலே நின்றது கிடையாது; நிரந்தரமான கண்டனத்துக்கு உரியதாக மாறி இருக்கிறது. அதே அடிப்படையில் இதுவும் மாறப்போகிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். இது நிற்காது, நீதிமன்றத்திற்குப் பல பேர் போயிருக்கிறார்கள்; இந்தியன் முஸ்லிம் லீக்கின் சார்பிலும் நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறார்கள். தேசிய அளவிலே உள்ள முஸ்லிம் அமைப்புகள் எல்லோரும் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அந்தக் காலத்திலே இப்பிரச்சினை தொடர்பாக நீதி மன்றத்திற்குச் சென்ற நேரங்களில் எல்லாம், ‘‘இது தேவையில்லை’’ என்றுதான் நீதிமன்றம் சொல்லி யிருக்கிறது. இந்த கருத்துகளையெல்லாம் அய்யா வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவை திருப்பிப் போட்டு
மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது!
மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது!
ஆக, உச்சநீதிமன்றத்திற்குப் போனாலும் சரி, இதற்கு எதிராகத்தான் நீதித்துறை கருத்து சொல்லும் என்ற அளவுதான் வரலாற்றிலே நான் தொடர்ந்து பார்த்து வரக்கூடிய ஒன்று. ஆக, மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை, மக்களைக் குழப்பி, மக்களிடத்தில் இருக்கக்கூ டிய அமைதியை கெடுக்கக்கூடிய வகையில், ‘தேசிய பாடல்’ என்கின்ற ஒரு புதிய முறையை உருவாக்குவதைக் கண்டித்து நடத்தக்கூடிய இந்தக் கூட்டம், இது இந்த இடத்தோடு நிற்கக் கூடியதுஅல்ல. இங்கே சில பேர் இருக்கிறோம்; ஆனால், இந்த சில பேர் அல்ல; இந்தியாவை திருப்பிப் போட்டு மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் இந்தக் கூட்டத்திற்கு இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தமிழ் மண்ணில் ‘சிஏ’ என்று சொல்லக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டம் வந்த போது, இன்றைய மானமிகு முதலமைச்சர் அவர்கள், இதே சென்னையில், பல லட்சம் பேரைத் திரட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்த ‘சிஏ’ சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்த முடியாது என்று சொன்னதை நாம் அறிவோம்.
அதேமாதிரி, இங்கே திராவிட முன்னேற்ற கழகத்தி னுடைய பிரதிநிதி இங்கு வந்திருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் நீங்கள் நிச்சயமாக சொல்வீர்கள். ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிற இந்த உத்தரவை எதிர்த்து, ‘‘இது நடைமுறைப்படுத்துவதற்கு உகந்தது அல்ல’’ என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை, நான் மரியாதையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ‘சிஏ’க்கு எப்படி நீங்கள் முன்னின்று போராட்டம் நடத்தி, அது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் பரவியதோ, அது மாதிரி இந்தப் பிரச்சனைக்குமு் ஒரு முடிவு கட்டக்கூ டிய வகையிலே, இதற்குத் தமிழ்நாடு அரசு முன்னிற்க வேண்டும். அய்யா வீரமணி அவருடைய ஆலோசனைக் கேட்டு செய்ய வேண்டும் என்று, நமது மானமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, அய்யா
ஆர்.எஸ்.பாரதி அவர்கள் மூலமாக நான் வேண்டுகோளாக வைக்கக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு போயிருக்கிறோம்; மற்றவர்களும் போயிருக்கிறார்கள். இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்திற்குப் போன இந்த வழக்குக்கு, உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு அத்தனையும் அரசு உத்தரவுக்கு எதிராகத்தான் வந்திருக்கிறது. அதுபோலத்தான் இப்பொழுதும் வரும் என்று நாம் நம்புகிறோம்.
ஹிந்துத்துவா என்கிற கொள்கையைத் திணிப்பதற்கான ஒரு பெரும் முயற்சி!
ஆக இப்படிப்பட்ட நீதித்துறையிலும் ஒதுக்கிய, ஏற்றுக்கொள்ளாத, வரலாறு ரீதியாகவும் ஒப்புக்கொள்ள முடியாத, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கும் எதிராக இந்தப் பாடலை இப்பொழுது புதிதாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அருமைச் சகோதரர் மாலி அவர்கள் சொன்னதுபோன்று, அவர்கள் தனது கற்பனையிலே வைத்திருக்கிற ஒரு புதிய தத்துவத்தை – ஹிந்துத்துவா என்கிற தத்துவத்தை – இந்தியாவிலே திணிப்பதற்கான பெரும் முயற்சியை தவிர , வேறு கிடையாது. இது பாடல் அல்ல; பாடலின் பெயரால், ஹிந்துத்துவா என்கிற கொள்கையைத் திணிப்பதற்கான ஒரு பெரும் முயற்சி என்பதிலே எந்த சந்தேகமும் இல்லை. அதைத் தெளிவாக உணர்ந்து கொண்டுதான் அய்யா அவர்கள் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதனால்தான், இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய பெரும் மரியாதைக்குரிய பெரியவர்களும், அருமைச் சகோதர, சகோதரிகளும் – இது ‘வந்தே மாதரம்’ என்ற ஒரு பாடல் பிரச்சினை அல்ல. இது இந்தியா என்கிற மாபெரிய நாடு. ‘ஆந்த்ரோபாலஜிகல் சர்வே’ எடுத்த புள்ளிவிவர கணக்குப் படி இந்த நாட்டிலே 4,296 கம்யூனிட்டிகள் இருக்கின்றன. ஒன்று, ஒரண்டு அல்ல; 4296 கம்யூனிட்டிஸ் –சமுதாயங்கள் இந்த நாட்டில இருக்கின்றன.
‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ காண்பதுதான் இந்தியா!
4296 சமுதாயங்களும் நாடு முழுவதும் இருக்கி றார்கள். முஸ்லிம்கள், இந்த 4296 சமுதாயங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். இதுதான் இந்த நாட்டுடைய வரலாறு. அதனால்தான், இந்த நாட்டுடைய பெருமையை வீரபாண்டியன் அவர்கள் சொன்னதுபோன்று, அருமைச் சகோதரர் சொன்னதுபோன்று ‘‘யூனிட்டி டைவர்சிட்டி’’ – இதுதான் நம் நாட்டுடைய கொள்கை. அதுதான் அடிப்படை – அதுதான் உண்மையான மதம். மதம் என்று ஒன்று இருக்குமானால், ‘‘யூனிட்டி டைவர்சிட்டிதான்’’ இந்தியாவுடைய மதம் எது என்று சொன்னால் ‘‘வேற்றுமையில் ஒற்றுமை’’ காண்பதுதான் இந்திய நாட்டு மதம். ஆக இந்த அடிப்படை கொள்கையை தகர்க்க கூடிய வகையில் ஒரு புதிய சித்தாந்தத்தை இந்தப் பாடல் மூலமாக திணிக்க முயல்வதை, நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்றுக்கொள்ள விடவும் முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முன்னணியில் நிற்கக்கூடிய கட்டத்திலே, உங்களோடு சேர்ந்து நாங்களும் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றம் அல்ல, எந்த நீதிமன்றத்திற்குப் போனாலும் சரி, இது தன்மானப் பிரச்சினை கிடையாது. இந்த தேசத்தையே அழிக்கிற ஒரு முயற்சி – அதனைத் தடுக்கிற கூட்டம் தான் இது. இந்தக் கூட்டத்திற்கு அய்யா அவர்கள் ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்து, மிகவும் பாராட்ட வேண்டும்.
உங்கள் முயற்சி வெல்ல, அனைத்து வகையிலும் ஒத்துழைப்போம்!
இந்தியாவை குலைக்கிற, இந்தியாவின் பெரு மையைக் கெடுக்கிற, இந்தியாவுடைய பாரம்பரியத்தை அழிக்கிற, இந்திய இறையாண்மையை, இந்தியா வினுடைய பன்முகத் தன்மையை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயர் பெற்ற இந்த நாட்டுடைய தனித்தன்மையை அழிக்கக்கூடிய, குலைக்கக்கூடிய முயற்சிகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய உங்கள் முயற்சி வெல்லட்டும் என்று கூறி, அதற்கு நாங்கள், எங்களாலான அனைத்து வகையிலும் ஒத்துழைப்போம் என்பதைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார் .
