திருச்சியில் அமைந்துள்ள தென்பகுதி ரயில்வே அலுவலகத்திற்கு ஹிந்தியில்பெயர் வைத்துள்ளதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியினர் தங்களது ஹிந்தி– சமஸ்கிருத வெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் “கர்தவ்ய த்வார்” என்று இந்தி பெயரை அப்படியே தமிழில் எழுதுவது ஏன்?
முன்பு பொதிகையை – தூர்தர்ஷன் ஆக்கினார்கள். வானொலியை ‘ஆகாஷ்வாணி’யாக்கி தமது ஹிந்தித் திணிப்பின் அரிப்பை பகிரங்கமாகவே காட்டி தமிழ் மக்கள் உணர்வினை அறைகூவலுக்கு அழைத்துள்ளனர்!
இன்னும் 15 நாட்களுக்குள் அதை மாற்றி, தமிழில் உரிய பெயரை வைக்கா விட்டால் மீண்டும் தார் சட்டி, ஹிந்தி அழிப்புப் போராட்டம் உட்பட எல்லா பகுதிகளிலும் துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிச்சயமாக!
வேண்டாம் இந்த விபரீத மொழி வெறி ஆதிக்கப் போக்கு! இரயில்வே துறை வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4.3.2026
