வேளாங்கண்ணி வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம்மையார் மறைவு இறுதி நிகழ்வில் மகளிரணியினர் உடலை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வேளாங்கண்ணி, மார்ச் 4- நாகப் பட்டினம் மாவட்ட கழக மேனாள் தலைவர் வி.எஸ்.டி.அழகப்பனின் வாழ்விணையரும், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியனின் தாயாருமான வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம்மையார் அவர்கள் (வயது 81) வயது மூப்பின் காரணமாக 24-02-2026 வேளாங்கண்ணியில் அவர் இல்லத்தில் மறைவுற்றார்

25-02-2026 அன்று மாலை வேளாங்கண்ணி அவரது இல்லத்தில் வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம் மையார் அவர்களுக்கு வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யேற்று வீரவணக்க உரையாற்றி கழகத் தலைவர் எழுதி விடுதலையில் வெளிவந்த இரங்கல் செய்தியை வாசித்தார்.

மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட காப்பாளர் கி.முருகையன், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான தாமஸ்.ஆல்வா எடிசன்,  பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.டி.சார்லஸ், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.சுரேஷ், மன்னார்குடி மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன். பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், கழகப் பேச் சாளர் இராம.அன்பழகன், நாகை மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, திருமருகல் ஒன்றிய தலைவர் இராச. முரு கையன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினார்கள். மாவட்ட செயலாளர் ஜெ. பூபேஷ் குப்தா, நிகழ்வினை ஒருங் கிணைத்தார்

பொதுக்குழு உறுப்பினர் நா. கமலம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, மாவட்ட துணை செயலாளர் கி. சுர்ஜித், காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம். கே.அருண் காந்தி,  மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் புட்பநாதன், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர். விடுதலை வாசகர் வட்ட செயலாளர்  ஏ.வி.என்.குணசேகரன், தஞ்சை புதிய பேருந்து நிலையப் பகுதி செயலாளர் வெ.துரை, திருமருகல் ஒன்றிய செயலாளர் சு.ராஜ்மோகன், நாகை நகர கழக செயலாளர் சண்,ரவிக்குமார், நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் கமலநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஆர்.அறிவுமணி, திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோ.பிளாட்டோ, காரைக்கால் மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ்பியர், திருமருகல் மகளிர் அணி பொறுப்பாளர் மு. ஹேமா, திருவாரூர் சாந்தி-அருண் காந்தி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியனிடம் தொலைபேசி மூலம் அம்மையாரது மறைவுக்கு இரங்கலும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்கு ன்றன், அவர்களும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்

பால்வளத்துறை மேனாள் அமைச்சர்  உ.மதிவாணன், பகுத்தறி வாளர் கழக மாநில துணைச் செய லாளர்  இல.மேகநாதன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன்,  தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன், திமுக நாகை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.என்.கார்த்திக், பகுத்தறிவாளர் கழக நாகை மாவட்ட தலைவர் மு.க.ஜீவா, மற்றும் ஏராளமானோர் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் எழுதிய இரங்கல் செய்தியை அச்சிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

கழக மகளிர் அணி தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் நா.கமலம், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செ. கவிதா, திருவாரூர் நகர மகளிர் அணி தலைவர் சு.பிரியா, நெ. செல்வி, (மருமகள்) அமுதா, (மகள்) செல்வகணபதி, (மருமகன்) அஷிதா-விஜயகுமார் (பேத்தி) ஆகியோர் முழக்கமிட்டு அம்மையாரது உடலை தோளில் சுமந்து சென்று பிறகு வாகனம் வாயிலாக உடல் எடுத்துச் செல் லப்பட்டது. மகளிர் அணித் தோழர் களும் சுடுகாடு வரை சென்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *