தி.மு.க.வுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழா! மதுரை அருகே மார்ச் 7இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, மார்ச் 4- மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயாராக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதனால், வேறு வழியில்லாமல் அதிமுகவில் 3 முறை முதலமைச்சராகப் பதவி வகித்திருந்தபோதும், ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், மதுரை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்னண் உள்ளிட்டோரும் சேர்ந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை தி.மு.க.வில் இணைக்கும் பணிகளில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இணைப்பு விழா, தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரைக்கு அருகே வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *