சென்னை கொளத்தூரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 4- இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், மனநல காப்பகம், மருத்துவ மய்யம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்கள் உறைவிடம்

2021-–2022ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், “சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களை பேணிப் பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்” என்று அறிவிக்கப் பட்டதை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 27.05.2025 அன்று திருக்கோவில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் சார்பில் ரூ.11.88 கோடி செலவில் கொளத்தூர் ராஜாஜி நகரில் 25,500 சதுர அடி கட்டட பரப்பளவில் 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (3.3.2026) திறந்து வைத்து, பார்வையிட்டு, மூத்த குடிமக்களிடம் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் நிர்வாக அறை, நல்ல காற்றோட்டம், போதுமான இடைவெளியுடன் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட அறை 5 எண்ணிக்கை, 4 படுக்கைகள் கொண்ட அறை ஒன்று, 3 படுக்கைகள் கொண்ட அறை 7 எண்ணிக்கை கொண்ட தங்கும் அறைகள், நவீன சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பல்நோக்கு அறை, முதலுதவி அறை, இயன்முறை மருத்துவம், அவசர சிகிச்சை உதவி மய்யம் மற்றும் இயன்முறை மருத்துவ அறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், சிறு பூங்கா, மனமகிழ் மன்றம், முடி திருத்தகம், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உறைவிடமானது 60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத மூத்த குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் முழு பராமரிப்பிற்கான நிதியுதவியினை சென்னை, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகின்றது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.சிறீதர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *