டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பழனிசாமி ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, பிரதமர் மோடி ‘என்டிஏ ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா காங்கிரஸ் அரசின் பிற்படுத்தப் பட்டோருக்கான 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து தனி நபர் மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும், ராகுல் பேச்சு.
* கேரள அரசு மீண்டும் பல்டி; சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது: உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேற்கு வங்க வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் தேர்தல் ஆணையம் – பாஜக கூட்டுச் சதி; தேர்தல்களில் தேர்தல் சமநிலையை தனக்கு சாதகமாக சாய்க்க “பாஜக வேண்டுமென்றே தேர்தல் ஆணையத்தின் துணையோடு” நீக்கியுள்ளதாக மம்தா குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
