வேலூர்,நவ.26 மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகர அரங்கத்தில் நேற்று (25.11.2023) ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண் காட்சியை நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த கண்காட்சியில் திமுக சார்பில் மக்களுக்கு ஆற்றிய நல்வாழ்வுப் பணிகள் குறித்த ஒளிப்படங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் மேனாள் முதல மைச்சர் அண்ணா மற்றும் கலை ஞர் கலந்து கொண்டு உரையாற்றிய ஒளிப்படங்கள், முத்தமிழ் அறிஞர் முத்திரை பதிவுகள் கொண்ட ஒளிப்படங்கள் உள்ளிட்ட பல் வேறு ஒளிப்படங்கள் வைக்கப் பட்டிருந்தன. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா உள்பட அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனி டம், ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போடக்கூடாது என நீதிமன்றம் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, “இனிமேலாவது ஆளுநர்கள் திருந்தினால் பரவாயில்லை” என பதில் அளித்தார்.