நீதிபதிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி, பிப்.22 விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தேர்தல் ஆணையம், ஆளும் ஒன்றிய பாஜக அரசின் ஏவலின் பேரில் தேர்தலுக்கு முன்னனதாக அவசர அவசரமாக வாக் காளர்களை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா இந்த எஸ்அய்ஆர் பணிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எஸ்அய்ஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், வாதாடியும் உள்ளார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்டார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களைத் தீவிரவாதிகள் போலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளதாகவும், 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் முரண்பாடு என்ற பெயரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதிகள் தேர்தல் அதிகாரிகளாக நியமனம்
இதற்கிடையே போதிய ஒத்துழைப்பு மாநில அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது தரப்பில் தெரி வித்தது. இந்நிலையில் இதுதொடர்பான மனுக்களை நேற்றுமுன்தினம் (20.2.2026) விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கு வங்கம்அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது.
அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை பற்றாக்குறையை ஒரு அசாதாரணமான சூழல் என்று கருதி உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகா ரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப் பித்துள்ளது. இதுவரை சரிபார்க்கப்பட்ட வாக் காளர் பட்டியலை பிப்ரவரி 28 அன்று வெளியிடவும், விடுபட்டவர்கள், நியமிக் கப்பட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட பின்னர் துணைப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
