சென்னை,ஏப்.15- சட் டப்பேரவையில் 13.4.2023 அன்று நடை பெற்ற சிறுபான்மையி னர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சிறு பான்மையினர் நலன் மற் றும் வெளிநாடுவாழ் தமி ழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பதில் அளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக் கிய அறிவிப்புகள் வருமாறு:
சிறுபான்மையினருக்கு
ஏழை சிறுபான்மையினருக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் மின் மோட்டாருடன் கூடிய 2,500 தையல் இயந்திரங் கள் வழங்கப்படும். உல மாக்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும், விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
ரூ.1,000 கல்வி உதவித் தொகை
மேலும் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் உறுப்பினர் களின் குழந்தைகளுக்கு ரூ.1000கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சென்னை, கோவை மாவட்டங்களில் ரூ.81 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல் லூரி மாணவர் விடுதிகள் தொடங்கப்படும். சென்னை ராயப் பேட்டையில் சிறுபான் மையினர் கல்லூரி மாண விகள் விடுதிக்கு ரூ.6 கோடி 7 லட்சம் செலவில் கட்டடம் கட்டப்படும். கோவை, திருச்சி மாவட் டங்களில் தலா ஒரு முஸ் லிம் மகளிர்உதவி சங்கம் ரூ.2 லட்சத்தில் தொடங் கப்படும்.
-இவ்வாறு அவர் அறிவித்தார்.