*திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்; கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, வைகோ திட்டவட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் ராகுல் காந்தி எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும்: பாஜக எம்பி நிஷிகாந்த் நோட்டீஸ்; மக்களவையில் கடும் அமளி. தூக்கில் கூட போடுங்கள்; கவலை இல்லை, காங்கிரஸ் பதிலடி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து “உடனடியாக வெளியேற்ற” கோரி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை ஒரு முக்கிய தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பிரதமரையும் அரசாங்கத்தையும் குறிவைத்து, “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்” என்றும் “ஒரு அங்குலம் கூட அசைய மாட்டேன்” என்றும் பதிலடி.
* “மதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” – வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்ற உள்துறை முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலை தான் உள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.
தி இந்து:
* டி.ஜி.பி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி இல்லாத பட்சத்தில் டி.ஜி.பி தகுதியில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அதிகாரி இடம் பெறலாம். உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரியின் பெயர் வந்ததை அடுத்து, காங்கிரஸ் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரியது.
– குடந்தை கருணா
