கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து குமரி முனையில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகள் நடைப் பயணம் டில்லியில் லட்சக்கணக்கானோர் பேரணி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கன்னியாகுமரி, பிப்,9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கள்  சார்பில், கன்னியாகுமரி (குமரி முனை) முதல் காஷ்மீர் வரை  நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 7, 2026 அன்று கன்னியாகுமரியில் (குமரிமுனை) காலை 10 மணிக்கு இந்த நடைப்பயணம் தொடங்கியது.

நடைப்பயணத்திற்கு தலைமை ஜக்ஜித் சிங் தல்லேவால்  போன்ற தேசிய அளவிலான விவசாய தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் பி.ஆர். பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

40 நாட்கள் வரை நடைபெறும் நடைப்பயணம்  மேற்கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு, பிற விவசாய சீர்திருத்தங்கள் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்தியா முழுவதும் கிராமங்கள் வழியாக சென்று, விவசாயிகளிடம் கையெழுத்து சேகரிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல். யாத்திரை காஷ்மீரில் முடிந்து, அதன் பின்னர் டில்லியில் பெரும் கிசான் மஹாபஞ்சாயத்  மற்றும் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். திட்டமிட்டபடி 19.03. 2026 அன்று டில்லியில் ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் பெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் விவசாய கொள்கைகளுக்கு (குறிப்பாக MSP உத்தரவாதம் இல்லாதது) எதிரான தொடர் போராட்டத்தின் ஒரு பகுதி. முந்தைய ஆண்டுகளில் டில்லி எல்லைகளில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இப்போது நாடு முழுவதும் விழிப்புணர்வு பரப்பும் வகையில் இந்தநடைபயணம் அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *