பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச் சூடு 4 வீரர்களைக் கொலை செய்த சக வீரர் கைது

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

புதுடில்லி, ஏப் 18  பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் சமீ பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே முகாமைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர்  கைது செய்யப்பட்டிருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வீரரின் பெயர் தேசாய் மோகன் என்றும், அவர் தனக்கு நேர்ந்த தனிப்பட்ட துன்புறுத்தல் காரணமாக, சக வீரர்கள் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றதாக கூறியதாகவும், பதிண்டா மூத்த காவல் கண் காணிப்பாளர் குல்னீத் சிங் குரானா தெரிவித்துள்ளார். ஆனால் என்ன மாதிரியான துன்புறுத்தல்களுக்கு தேசாய் மோகன் ஆளானார் என் பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட் டார். இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல்கள் காவல்துறையினரின் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரியவரலாம். தேசாய் மோகன்  பதிண்டா நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக் காக காவலில் எடுக்கப்பட்டார். 

4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை 

கடந்த ஏப்.12ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக் கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயி ரிழந்தனர். 

இது குறித்து இந்திய ராணுவத் தின் தென்மேற்கு கமாண்ட் வெளியிட்ட அறிக்கை யில், “பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகா மில் 12.4.2023 அன்று அதிகாலை 4.35 மணிக்கு தாக்குதல் நடை பெற்றது. இதில் 4 பேர் உயிரிழந் தனர்” என்று தெரிவித்திருந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ராணுவ வீரர்கள் இரவு 2 மணிக்கு தூங்கி இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் இரவு 3 மணிக்கு அவர்கள் தூங்கிவிட்டதை உறுதி செய்துள்ளார். பின்னர் சமீபத்தில் திருடிய துப்பாக்கியால், சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளார்” என்று கூறியுள் ளார். இந்த சம்பவம் தொடர்பாக பதிண்டா கண்டோமென்ட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302(கொலை) மற்றும் ஆயுதச் சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. இந்நிலையில் தாக்குத லில் ஈடுபட்ட சக வீரர் மோகன் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேரில் கண்ட சாட்சி தேசாய்

வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, தற்போது குற்றம்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் தேசாய் மோகன் மட்டுமே சம்ப வத்தை நேரில் கண்ட சாட்சியாவார். இந்த வழக்கு தொடர்பாக   மோகன் உள்பட 4 வீரர்களுக்கு அழைப் பாணை அனுப்பப்பட்டு விசா ரணை  மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக தேசாய் மோகன்,” சம்பவம் நடந்த இடத்தின் அருகில் குர்தா பைஜாமா அணிந்து முகத்தை மூடிய இருவர் அதி காரிகளின் மெஸ் அருகே காணப் பட்டதாக தெரிவித்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *