கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதுரை, பிப்.7 கோயில் குட முழுக்கில் யாருக்கும் முதல் மரி யாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்காக முத்தரையர், மறவர் மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிறீமதி, “மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் 5 சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை தகுதியான நபர் ஒருவரை நியமிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். இதனி டையே, ராஜேஷ் கண்ணன் என்பவர் குடமுழுக்கு நடத்த உரிமை கோரி உள்ளார். ஆனால் குடமுழுக்கு என்பது தனி நபரால் நடத்தப்படக்கூடாது.

ஆகவே இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட நபர், ஒவ்வொரு சமுதாயத்தில் இருந்தும் ஒரு நபரை உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க வேண்டும். குழுவோடு இணைந்து குடமுழக்கை நடத்த வேண்டும்.விழாவில் தனி நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது. எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *