தமிழ்நாட்டில் இதுவரை 260 கோடி மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் பயணம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை,ஏப்.19- தமிழ்நாட்டில் மகளிர் கட்டண மில்லா பேருந்துகளில் இதுவரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய் யலாம்’ என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்து களிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் தேதி வரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *