சென்னை,ஏப்.20- தமிழ்நாட்டில் பன்னாட்டு போட்டிகளை நடத்துவதில் தி.மு.க அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. உலகமே ஆச்சரியப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நடத்திக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து அடுத்த டுத்து தமிழ்நாட்டில் பன்னாட்டு போட்டிகளை நடத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி பன்னாட்டு ஆசிய வாகையர் கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பன்னாட்டு ஹாக்கி போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மாமல்லபுரத்தில் பன்னாட்டு அலை சறுக்குப் போட்டி ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட் டியை தமிழ்நாடு சர்ஃபிங் அசோசி யேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன் முறையாகச் பன்னாட்டு சர்ஃப் ஓப்பன் போட் டியை (அலை சறுக்கு) நடத்துகின் றது. இப்போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள் ளது.
இந்த போட்டி குறித்து செய்தி யாளர் சந்திப்பு சென்னை ஆழ் வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற் றது. இதில் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்கத் தலைவர் அருண் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், “இந்தியாவில் முதன் முறையா கப் பன்னாட்டு சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது. மாமல்லபு ரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20ஆம் தேதி வரை பன்னாட்டு அலைச றுக்கு ஓபன் போட்டி நடைபெறு கின்றது.
இந்த பன்னாட்டு சர்ஃப் ஓபன் போட்டியை நடத்தத் தமிழ் நாடு அரசு ரூ. 2.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பன்னாட்டு சர்ஃப் ஓபன் போட்டியை சிறப்பான முறையில் நடத்துவோம். ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் இப் போட்டியில் 80லிருந்து 100 வெளி நாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.