புவியியல் அதிசயம் மனிதன் பார்த்திராத விலைமதிப்பில்லா புதிய கனிமம் கண்டுபிடிப்பு

2 Min Read

புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப நீர் செயல்பாடுகளின் (Hydrothermal activity) போது, ஏற்கெனவே இருந்த தாதுக்கள் உருகி புதிய அணுக்கட்டமைப்பில் உருவானதே இந்த ஜின்சியுயைட்.

நமது பூமி இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது என்பதற்குச் சான்றாக, தெற்கு சீனாவின் குவாங்ஷி (Guangxi) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் இதுவரை அறிவியலால் அறியப்படாத ஒரு புதிய கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன புவியியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இந்தக் கனிமத்திற்கு ‘ஜின்சியுயைட்’ (Jinxiuite) எனப் பெயரிடப் பட்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் (IMA) இந்தக் கண்டுபிடிப்பை அதிகாரப் பூர்வமாக உறுதி செய்துள்ளது.

யார் இந்த ‘ஜின்சியுயைட்’?

இந்தக் கனிமம் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது அல்ல. இது நிக்கல், பிஸ்மத், ஆன்டிமனி, ஆர்சனிக் மற்றும் கந்தகம் (Sulfur) ஆகிய தனிமங்களின் அபூர்வ கலவையாகும்.

புவியியலாளர்களின் கூற்றுப்படி, பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப நீர் செயல்பாடுகளின் (Hydrothermal activity) போது, ஏற்கனவே இருந்த தாதுக்கள் உருகி புதிய அணுக்கட்டமைப்பில் உருவானதே இந்த ஜின்சியுயைட்.

இந்தக் கனிமம் கண்டறியப்பட்ட ‘லோங்குவா’ (Longhua) சுரங்கம், உலகின் மிகச் செழுமையான நிக்கல்-கோபால்ட் படிவுகளைக் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஒரு சுரங்கத்தில் 0.2% நிக்கல் இருந்தாலே அது லாபகரமானது எனக் கருதப்படும். ஆனால் இங்கே 17.5% நிக்கல் உள்ளது.

வழக்கமான அளவை விட 80 மடங்கு அதிகமாக 1.5% கோபால்ட் இங்கே கிடைக்கிறது.

இந்த அபூர்வ கனிமமும், தாதுக்களின் இந்த அதீத செறிவும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உங்களுடைய ஸ்மார்ட்போனுக்கும்
இதற்கும் என்ன சம்பந்தம்?

“புதிய கல்லால் நமக்கு என்ன லாபம்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு நமது அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது. நீங்கள் ஓட்டும் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரி தயாரிக்க நிக்கல் மற்றும் கோபால்ட் மிக அவசியம்.

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஜெட் என்ஜின்களின் உறுதித்தன்மைக்கு இந்தக் கனிமங்கள் தான் ஆதாரமாக உள்ளன.

புதிய கனிமமான ஜின்சியுயைட், பூமிக்கு அடியில் இன்னும் எத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான உலோகப் படிவுகள் மறைந்துள்ளன என்பதைக் கண்டறிய ஒரு திசைகாட்டியாக அமையும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அறிவியலின் அடுத்த கட்டம்

இந்தக் குட்டி கனிமம் வெறும் கல் அல்ல; இது பூமியின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லும் ஒரு ‘டைம் கேப்சூல்’. “பூமியின் ஆழத்தில் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? உலோகங்கள் எப்படி ஒன்றிணைந்தன?” போன்ற கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கனிமம் வழங்கக்கூடும்.

புவியியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையைத் தீர்மானிப்பதில் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *