புதுடில்லி, ஏப்.21 புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வாக னங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக் குதலில் 40 வீரர்கள் கொல்லப் பட்டனர்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக், இந்த விவகாரம் தொடர்பாக அமைதி காக்கும்படி பிரதமர் மோடி தன்னிடம் கூறி யதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை டில்லியில் காங்கிரஸ் கட்சி நடத்தியது. அதில் அக்கட்சியை சேர்ந்த, ஓய்வுபெற்ற கர்னல் ரோகித் சவுத்திரி, ஓய்வு பெற்ற விங் கமாண்டர் அனுமா ஆச்சாரியா ஆகியோர் கூறிய தாவது:-
‘புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக், ராணுவ மேனாள் தலைமை தளபதி சங்கர்ராய் சவுத்திரி வெளியிட் டுள்ள அதே கவலை, பாதுகாப்பு துறையினருக்கும், ஒட்டுமொத்த தேசத்துக்கும் இருக்கிறது.
ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப் படலாம் என்று 2019-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கும், பிப்ரவரி 13-ஆம் தேதிக்கும் இடை யில் அளிக் கப்பட்ட உளவுத்துறை எச்சரிக் கைகள் புறக்கணிக்கப்பட் டது ஏன்?
பயங்கரவாதிகளால் 300 கிலோ வெடிப் பொருட்களை பெறமுடிந் தது எப்படி? தெற்கு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும் இந்த அளவு வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படாதது ஏன்? புல்வாமா தாக்குதல் நடந்த 4 ஆண்டுகளுக்குப் பின்பும் இது குறித்த விசாரணை எந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது? அந்த விசாரணையை முடிப்பதிலும், அதில் வெளிவரும் தகவல்களை நாட்டுக்கு தெரிவிப்பதிலும் ஏன் தாமதம்?
இந்த தாக்குதல் எப்படி நடந் தது, இதில் உளவுத்துறை தோல்வி என்ன, ஏன் விமானம் மூலம் செல்ல சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் என் னென்ன, இந்த விவகாரத்தில் சி.ஆர்.பி.எப்., உள் துறை அமைச் சகம், பாதுகாப்பு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதமர் அலு வலகத்தின் பங்கு என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.