கவனிக்கத்தக்கது! ‘சீட் பெல்ட்’ உயிரைக் காத்தது கார் விபத்தில் சிக்கிய கேரளாவின் பத்தனம்திட்டா ஆட்சியர் நெகிழ்ச்சி!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பத்தனம்திட்டா, ஜன. 26–- விபத்தின் போது ‘சீட் பெல்ட்’ அணிந்திருந்ததால் மட்டுமே தான் பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியதாக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கார் விபத்து

கடந்த 23.1.2026 அன்று கேரள மாநிலம் கோன்னி அருகே மாவட்ட ஆட்சியரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தவறான திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்று ஆட்சியரின் காரின் மீது பலமாக மோதியது. இதில் ஆட்சியரின் கார் நிலைதடுமாறி தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஓட்டுநர் ஆகிய மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. மற்றொரு காரில் இருந்த நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் பேட்டியளித்தபோது கூறியதாவது:

தூக்கி வீசப்படவில்லை

“நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த போதும் சீட் பெல்ட் அணிந்திருந்தேன். கார் கவிழ்ந்த போது, பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் நான் காரின் உள்ளே தூக்கி வீசப்படவில்லை.”

“சீட் பெல்ட் என்னை இருக்கையோடு பிணைத்து வைத்திருந்ததால், உள்ளூர் மக்கள் என்னை வாகனத்திலிருந்து விரைவாகவும் எளிதாகவும் வெளியே எடுக்க முடிந்தது.” ஓட்டுநர் விபத்தைத் தவிர்க்க முயன்றும், எதிரே வந்த கார் அதிவேகத்தில் மோதியதால் விபத்து தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இந்த விபத்து தொடர்பாக, தவறான திசையில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காரின் முன் இருக்கை மட்டுமின்றி, பின் இருக்கையில் அமருபவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஆட்சியர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

 

வெளிநாடுகளில் 71 இந்திய பொருளாதாரக் குற்றவாளிகள்

ஒன்றிய அரசின் ஆண்டறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஜன. 26- கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் 71 பேர் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

இந்தியாவால் தேடப்படும் 71 இந்திய பொருளாதாரக் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா திரும்பியவர்கள்: அதே நிதியாண்டில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்தியாவில் வெளிநாட்டினர்: வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தப்பி வந்த 203 பொருளாதாரக் குற்றவாளிகள் இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பைப் பெற இந்திய நீதித்துறை சார்பில் ‘எழுத்துப்பூர்வ கோரிக்கைகள்’ (Letters Rogatory) அனுப்பப்படுகின்றன. அதன்படி: கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரை மொத்தம் 74 கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதில் 54 கோரிக்கைகள் சிபிஅய் (CBI) வழக்குகளுடன் தொடர்புடையவை.

மீதமுள்ள 20 கோரிக்கைகள் மாநில மற்றும் பிற ஒன்றிய விசாரணை அமைப்புகளின் வழக்குகளுடன் தொடர்புடையவை. என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *