மலேசியா, ஜன. 20- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, மலேசியா நாட்டில் உள்ள 6 தமிழ்ப் பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பும் விழா, சென்னையில் நடைபெற்றது.
மலேசிய நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆறு தமிழ்ப் பள்ளிகளில், திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள், 6 திருவள்ளுவர் சிலைகளை, மலேசியா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தின் தலைவர் பெருந்தமிழன் பா.கு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார்!
டாக்டர் வி.ஜி.சந்தோசம் கூறுகையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் உலகமெங்கும் இதுவரை 191 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளோம். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை உலகமெல்லாம் நிறுவுவதற்கும், திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்கவும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்றும் பாடுபட்டு வரும் என தன் உரையில் கூறினார்.
இவ்விழாவில், மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா, மலேசிய நாட்டின் முருகன், பிரான்ஸ் நாட்டின் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் விசு செல்வராஜ், மலேசிய நாட்டின் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்!
