புதுடில்லி, ஜன.20 இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், பாஜக-வின் உத்தி ஆட்சியை பிடிப்பதோ, மெஜாரிட்டி பெறுவதோ அல்ல. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிகாரத்திற்கு வந்து, அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கபில் சிபல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களில் அவர்கள் அதிகா ரத்திற்கு வருவது அல்லது மெஜாரிட்டி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அதிகாரத்திற்கு வந்து, பின்னர் அந்த கட்சிகளை ஓரங்கட்டுவதுதான்.
இந்த ‘உத்தி’ பீகாரில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மகாராட்டிராவில் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களின் சந்திப் பின்போது அவர் தெரிவித்த தாவது:-
மகாராட்டிரா மாநில மாநகராட்சி தேர்தல் சில தகவல்களை அந்த மாநிலத்திற்கும், தேசிய அளவிலான தேர்தலுக்கும் கொடுத்துள்ளது.
இந்த நேரத்தில் மும்பை மாநக ராட்சியின் பட்ஜெட் 74 ஆயிரம் கோடி ரூபாய் முக்கியமானது என்பதை மக்க ளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மாநகராட்சி தேர்தலில், சிவ சேனா ஒருங்கிணைந்து இருந்த நேரம், மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
2012 இல் பாஜக வெறும் 31 இடங்க ளைத்தான் பெற்றது. 2017 இல் அவர்கள் 82 இடங்களை பிடித்தார்கள். தற்போது 89 இடங்களை பிடித்துள்ளனர். சிவசேனா 2012 இல் 74 இடங்க ளையும், 2017 இல் 84 இடங்களையும், தற்போது 29 இடங்களையும் பிடித்துள்ளது.
காங்கிரஸ் 2012 இல் 52 இடங்க ளையும், 2017 இல் 31 இடங்களை யும், தற்போது 24 இடங்களையும் பிடித்துள்ளது. 2012 இல் என்சிபி 13 இடங்களையும், 2017 இல் 9 இடங்க ளையும், தற்போது 3 இடங்களையும் பிடித்துள்ளது. எம்என்ஸ் 2012 இல் 28 இடங்களையும், 2017 இல் 7 இடங்க ளையும், தற்போது 6 இடங் ளையும் பிடித்துள்ளது. இது பாஜக-வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் இறங்கு முகத்தில் உள்ளன என்பதை காட்டுகிறது.
அவர்கள் எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சிறிய கட்சிக ளுடன் கூட்டணி வைப்பார்கள். இறுதியாக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களை ஓரங்கட்டி விடுவார்கள். இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்.
