18.1.2026 ஞாயிற்றுக்கிழமை
மேட்டூர் கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர் கழக மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்ன மணலி, எடப்பாடி *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சிநதாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்), பெ.சவுந்திரராஜன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.சத்தியநாதன் (பெரியார் பெருந்தொண்டர்), கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) *வழிகாட்டுதல் உரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: 6.2.2026 அன்று எடப்பாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பாக வரவேற்பது, பெரியார் உலகம் நிதி வசூலை விரைவுபடுத்துவது, எடப்பாடி வெள்ளாண்டிவலசு வெங்கடேஷ்வரா மண்டபத்தில் 6.2.2026 காலை 10 மணிக்கு நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், போதிய நிதி திரட்டவும் ஆலோசித்தல் *விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *நன்றியுரை: சி.மெய்ஞான அருள் (நகரச் செயலாளர்).
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்
தமிழ் மாமணி விருது பெற்ற டாக்டர் அண்ணாமலை மகிழ்நன்,- தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோருக்கு பாராட்டு விழா
தமிழ் மாமணி விருது பெற்ற டாக்டர் அண்ணாமலை மகிழ்நன்,- தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோருக்கு பாராட்டு விழா
சென்னை: காலை 10.30 மணி *இடம்: கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கக் கட்டடம் (ஆர்.வி.டவர்) கிண்டி, சென்னை *வரவேற்புரை: முனைவர் முகம் இளமாறன் *தலைமை: பேரா.இராம.குருநாதன் (தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்) *வாழ்த்துரை: ஓவியா (புதிய குரல்), டாக்டர்
இரா.கண்ணன் (அய்க்கிய நாடுகள் சபை), டாக்டர் எஸ்.ஆர்.இரமணன் (மேனாள் இயக்குநர், வானிலை ஆராய்ச்சி நிலையம்) ஆ.சண்முகவேலாயுதன்,
பெ.கி.பிரபாகரன் *நன்றியுரை: ஆ.செகதீசன் *ஏற்புரை: டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், வழக்குரைஞர் அ.அருள்மொழி *தொகுப்புரை: குயில்மொழி *ஏற்பாடு: இலக்கிய வட்டம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை.
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
விடுதலைநகர்: காலை 10 மணி *இடம்: விடுதலை நகர் பெரியார் நூலகம் * தலைமை: வேலூர் பாண்டு (மாவட்டக் கழகத் தலைவர்) * முன்னிலை: நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் (மாவட்டக் காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் *மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் * அழைப்பு: தமிழினியன் மாவட்ட செயலாளர்.
