உறவுகளைப் பிரிந்து ஆதரவற்ற நிலையில் வாழும் மக்களுடன், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மய்யத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். செல்லும் வழியில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றவர்களைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அவர்களுக்கு புதிய வீடுகள் வழங்க உத்தரவிட்டுள்ளதை தெரிவித்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
