காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம் மாவட்டக் கழக சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், புவனகிரி ஒன்றிய தலைவர் என்.ஏ.இராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நேரில் மரியாதை செலுத்தினார்.
2.1.20266 அன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய வழக்குரைஞர் ஆ.மணிக்கும், தருமபுரி நகர கழக செயலாளர் கிழக்கு, நாட்டாண் மாதுவுக்கும், தருமபுரி நகர திமுக செயலாளர் மேற்கு கவுதமனுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் மாவட்ட கழகத் தலைவர் கு.சரவணன், மாவட்டச் செயலாளர் பீம தமிழ்பிரபாகரன், மாவட்டத் தொழிலாளர் அணிச் செயலாளர் மாணிக்கம், மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் தொடர் முயற்சியினால் , திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் செல்கின்ற திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ், மொரப்பூர் ரயில் நிலையத்தில், நின்று செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது ..
அவரின் தொடர் முயற்சிக்கு கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ் ஆண்டு, பெரியார் நாட்காட்டியும், பகுத்தறிவாளர் கழக நாட்குறிப்பும்(Diary) வழங்கப்பட்டது ..
தருமபுரியில் நடைபெற இருக்கின்ற பெரியார் உலக நிதியளிப்பு விழா குறித்தும், தமிழர் தலைவர் வருகை குறித்தும், மிகுந்த வரவேற்புகளோடும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திராவிட முன்னேற்ற கழக நகரக் கழக செயலாளர்களும் கேட்டு அறிந்தனர். கூட்ட நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் உற்சாகத்தோடு உறுதி அளித்தனர்.
