டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நமது தமிழ்நாட்டின் பெருமையை வெளிக் காட்டும் கீழடி, பொருநை காட்சியகங்களைக் காணுங்கள். மொழி உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த இயக்கம் திமுக என்றும், இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஅய் 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள். பொங்கல் விழா முடிந்த பிறகு, விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஅய் முடிவு !
* அமலாக்கத்துறைக்கு எதிரான மம்தாவின் போர்; பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் எப்படி போராட வேண்டும் என்பதை நிரூபித்து உள்ளது பாராட்டத்தக்கது என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வங்காளத்தில் உள்ள எஸ்அய்ஆர் செயல்முறைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெரிக் ஓ’பிரையன் மற்றும் டோலா சென் ஆகியோரின் மனுக்களுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திடம் இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கோரியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’ பெயர் மாற்றம் உள்ளிட்ட மோடி அரசின் புதிய மசோதாகள் திரும்பப் பெறப்படாவிட்டால் பிரதமர் மோடி கடுமையான எதிர்ப்பை எதிர் கொள்வார்: மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை.
தி இந்து:
* கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரக போராட்டம். கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.
* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம்: சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை என்பது பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயல்படுவதற்கு பதிலாக, இயந்திரத்தனமாகவும், தொழில்நுட்பக் காரணங்களாலும் இயக்கப்படுகிறது என சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையில் உள்ள குறைபாடுகளை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தி டெலிகிராப்:
* உ.பி. ஷாஜஹான்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலாட்டா செய்த சங்கிகள்: பல் மருத்துவரான டாக்டர் அட்னான் அன்சாரி, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 35 வயதான நீலம் என்பவரை சென்ற ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். தற்போது தங்கள் ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ‘ஹிந்துத்வா சங்கிகள்’ உள்ளே நுழைந்து கலாட்டா. நிகழ்ச்சி ரத்து.
– குடந்தை கருணா
