ஜெயங்கொண்டம், ஜன.13– அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி யின் உத்தரவின்படி 08.01.2026 அன்று ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் “சாலை பாதுகாப்பு மாதத்தை” முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகரில் உள்ள பெரியார் மெட்ரி குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரணர் இயக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் விதிகளை கற்றுக்கொடுத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்பு பள்ளி மாணவர்களுக்கு ஜெயங்கொண்டம் நான்கு சாலை பகுதியில் இருந்து அண்ணா சிலை வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் ரஜினி, போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 150 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடம் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் நான்கு சக்கரங்களில் சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் என்றும் மாணவர்கள் முப்படை மாணவர்கள் நின்று சாலை பாதுகாப்பை சரி செய்து அனுப்பினார்கள். துண்டு பிரச்சாரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது என்றும் அதிவேகமான பயணம் ஆபத்து என்றும் மேலும் நான்கு வழி சாலையில் நான்கு ரோடு சந்திப்பில் நமது பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலை சரி செய்தும் போக்குவரத்தை சரியான முறையில் சீர் செய்தும் அனுப்பினர்.
