பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படும் தெலங்கானா மாநில முதலமைச்சர் எச்சரிக்கை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், ஜன.13 பெற்றோரை கைவிட்டால் மாநில அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப் பட்டு, அது அவர்களின் பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப் படும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அய்தராபாத் பிரஜா பவனில் நேற்று (12.1.2026) ‘பால பரோசா’ மற்றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்டங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த்  தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார். இதில் அவர் பேசும்போது, இந்த அரசு உங்களுக்காக உள்ளது என்பதை உரக்க கூறவே இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த இணையர் அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதே சமயத்தில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்பவருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசுப் பணியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதேபோன்று விளையாட்டு துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு பணி ஒதுக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் அரசு பணியில் இட ஒதுக்கீடு, ‘இந்திராம்மா வீடு’கள் வழங்கப்பட்டு வருகிறது.

பிரணய் திட்டம் மூலம் முதியோரை நல்ல வழியில் பாதுகாக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இனி பெற்றோரை ஒதுக்கி வைத்தாலோ, அனாதை இல்லங்களில் சேர்த்தாலோ, கைவிட்டாலோ அரசு ஊழியர் களின் ஊதியத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதாமாதம் பிடித்தம் செய்து, அப்பணத்தை கைவிடப்பட்ட பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோரை கைவிடுபவர்களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண் டும். பெற்றோருக்கு உபயோ கப்படா விட்டால், அவர்கள் இந்த சமூகத்துக்கு எப்படி உபயோகப்படுவார்கள்?

ஒவ்வொருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். ஜாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி நம் மாநிலத் துக்கு நிதி வழங்க வேண்டும். நம்முடைய பிடிவாதத்தால் தான் ஒன்றிய அரசு இறங்கி வந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத் துகிறது. இவ்வாறு முதலமைச்சர் ரேவந்த் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *