பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் – லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று (11.1.2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். செய்தியை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மூத்த சகோதரி தா.வெண்ணிலாவிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார். மறைந்த ஜெ.இன்பராஜின் இறுதி நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு – 96260 33593.
– – – – –

தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்களின் மாமியாரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக வழக்கறிஞரணி அமைப்பாளர் தாராபுரம் வழக்குரைஞர் க.செல்வராஜ் அவர்களின் தாயாருமான மறைந்த ஆசிரியர் டி.எஸ்.கந்தசாமி அவர்களின் மனைவியுமான க.பாலாமணி அவர்கள் இன்று (12.1.2026) காலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி வாயிலாக அமைச்சர் என்.கயல்விழி மற்றும் அவரது இணையர் க.செல்வராஜ் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
– – – – –

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் வத்சலா (வயது 62) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (11.1.2026) காலமானார் என்பதை அறிந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேனியிலிருந்து , கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
– – – – –

சமூக ஆர்வலர் திண்டுக்கல் அரிமா சங்க உறுப்பினர் காஜா மைதீன் நேற்று (11.01.2026) மறைவுற்றார். தகவல் அறிந்த கழகத் தலைவர் திண்டுக்கல் பேகம்பூர் நத்தர்ஷா தெருவில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று காலை சென்று, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். உடன் திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர்.
