சிங்கப்பூர், ஜன. 10- செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் அய்ரோப்பிய நாடுகளை விட இந்தியாவும், சிங்கப்பூரும் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய சந்தைகளில் உள்ள நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவை பணமாக்குவதில் தங்கள் மேற்கத்திய போட்டி நிறுவனங்களை விட வேகமாகச் செயல்படுகின்றன. செலவு குறைப்பி லிருந்து, வருவாய் ஈட்டுதல் நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவும், சிங்கப்பூரும் முன்னிலை வகிக்கின்றன என்று தெரிய வந்திருக்கிறது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவான தட் வொர்க்ஸ் ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் 3,500 தகவல் தொழில்நுட்ப முடிவெடுப்ப வர்கள் மற்றும் C-நிலை தலைவர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 77 சதவீத வணிகத் தலைவர்கள் தங்கள் ஏஅய் உத்திகளை செலவு சேமிப்பிலிருந்து, வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாற்றி யுள்ளனர். அதாவது முன்னர் ஏஅய் பயன்படுத்தி செலவை குறைத்தார்கள். ஆனால், தற்போது ஏஅய்-அய் பயன்படுத்தி எப்படி காசு பார்ப்பது என்பதை நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன.
வருவாய் அதிகரிப்பு
எனினும், இந்த மாற்றத்தின் வேகம் ஒவ்வொரு பிராந்தி யத்திற்கும் மாறுபட்டாலும், ஆசிய நாடுகள் ஏஅய் மீதான அதிகபட்ச நம்பிக்கை மற்றும் பயன்பாட்டுடன் முதலிடத் தில் உள்ளன. வளர்ச்சி சார்ந்த ஏஅய் உத்திகளை தீவிரமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. பிரேசில் நாட்டுடன் இணைந்து, இது ஆய்வில் மிகவும் நம்பிக்கையான சந்தையாகக் கருதப்படுகிறது. இங்கு 49.2 சதவீத நிர்வாகிகள் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் ஏஅய் மூலம் 15 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள்.
ஏஅய் பயன்பாடு அதிகரிப்பு
உலகத் தலைவர்களில் கிட்டத் தட்ட பாதி பேர், வரும் பத்தாண்டிற்குள் ஏஅய் 15 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய் உயர்வை அளிக்கும் என எதிர்பார்க் கின்றனர். இந்த வருவாயை தவறவிட்டு விடுவோமோ? என்ற அச்சம் வணிகத் தலைவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. எனவே ஏஅய்-அய் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
ஏஜென்டிக் ஏஅய்
குறிப்பாக இந்தியாவும், சிங்கப்பூரும் சுயமாக முடிவெடுக்கும் ஏஜென்டிக் ஏஅய் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில், 48.6 சதவீத இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. சிங்கப்பூரை பொறுத்தவரை 40.8 சதவீத நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சிங்கப்பூர் வணிகர்களிடம் ஏஅய் FOMO பயம் அதிகமாக இருக் கிறது. அதாவது ஏஅய் பலரின் வேலையை காலி செய்வதற்கு பயன்படுத்துவதற்கு பதில், மனிதர்களை ஏஅய் பயன்படுத்த கற்றுக்கொடுத்து அதன் மூலம் பணம் பார்க்கும் முறை அதிகரித்திருக்கிறது. இதனால் வரும் வருமானத்தை தவற விட்டுவிடுவோமோ என்கிற பயத்தைதான் ஏஅய் FOMO என்பார். எனவே சிங்கப்பூர் வணிக நிறுவனங்கள் அவசர, அவசரமாக ஏஅய் பயன்பாட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது ஒரு நல்ல மாற்றம்தான் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
