ஜெய்ப்பூர், ஜன. 10 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலா வார் மாவட்டம் அக் லேரா அருகே பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஹிந்துத்துவா கும்பல் ஒன்று, மாட்டி றைச்சி வைத்திருந்ததாகக் கூறி மன நலம் பாதித்த முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட முதி யவர் வலியால் அலறிய போது, ஹிந்துத்துவா குண்டர்களில் ஒருவர், ‘‘இவன் எப்படி இருந்தாலும் ஒரு முஸ்லிம் தான்” என்று வன்மத்துடன் வெறுப் புப் பேச்சைக் கக்கினர்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து “ஆல்ட் நியூஸ் (Alt News)” ஊடகம் ஜாலாவார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அமித் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த காட்சிப் பதிவு ஆதாரத்தின் அடிப்படையில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காட்சிப் பதிவை ஆதாரமாகக் கொண்டு, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராகேஷ் ராவ், அஜய் பரேதா மற்றும் ரோகன் சென் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குள்ளேயே குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
