காரைக்காலை அடுத்துள்ளது திரு நள்ளாறு கோயில். சனி தோஷத்தை கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்த கோயிலைப் பற்றி விதவிதமாக வண்ண வண்ணமாக கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ஏழரை நாட்டு சனி பிடித்து விட்டது. அதனால் பெரும் கஷ்டங்கள் வந்து சேரும். இந்த சனீஸ்வரன் கோயிலுக்கு வந்து சடங்குகள் செய்து தட்சிணைகளை அள்ளிக் கொடுத்து குளத்தில் மூழ்கினால் தோஷம் போகும் என்பது கொழுப்பெடுத்த மூடநம்பிக்கை. ஆனால் என்ன நடந்தது? அந்த சனீஸ்வர பகவான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ரோகிணி (வயது 60) என்பவரது வீட்டிலேயே ரூபாய் ஒன்பதரை லட்சம் நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிற்று. அந்தோ பரிதாபம் அன்றாடம் சனீஸ்வர பகவானுக்கு பூஜை செய்யும் அர்ச்சகருக்கே சனி பகவான் சக்தி வேலை செய்ய வில்லையே! சனி பகவான் தன் திருமுகத்தை அர்ச்சகர் பக்கம் காட்டவில்லை – இதுதான் பக்தியா? பக்தர்கள் சிந்திப்பார்களாக!