ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்போம்! டிரம்ப் எச்சரிக்கை

1 Min Read

நியூயார்க், ஜன.6- மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று எனக்கு உறுதியளித்தார்.

இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிகள் அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று என்னிடம் மோடி கூறினார்.

ஆனால், இந்தியா தொடர்ந்து எண்ணை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ரஷியாவின் எண்ணெய் பிரச்சினையில் உதவாவிட்டால், இந்தியா மீது நாங்கள் மேலும் வரிகளை உயர்த்து வோம்” என்று கூறினார்.

மேலும், “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்” என மிரட்டும் தொனியில் டிரம்ப் பேசியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்க மாட்டோம் என்று பிரதமர் மோடி டிரம்பிடம் கூறவில்லை என்றும் டிரம்ப்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்றும் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கும் இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *