முதன் முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது தி.மு.க.வே!
தி.மு.கழகம் பங்கேற்ற முதல் தேர்தலில் அதாவது 1957இல்
அந்த குழுவில் என்.வி.நடராசன் தலைவராகவும், ஈ.வெ.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், தலைவர் கலைஞர், ஏ.கோவிந்தசாமி,எம்.பி.சுப்பரமணியம், சத்தியவாணி முத்து ஆகியோர் உறுப்பினர்களா கவும் இருந்தனர்.
அந்த குழு தயாரித்த தேர்தல் அறிக்கை 10.2.1957 அன்று வெளி யிடப்பட்டது.
22 தலைப்புகளுடன் வெளியான அறிக்கை,அந்த தலைப்புகளில் சில,
1] திராவிட நாடு விடுதலை
2] அரசியல் சமத்துவம்
3]மத்திய ஆட்சி அதிகாரங் களுக்கு வரம்பு
4] நிலச் சீர்திருத்தம்
5] விவசாய முன்னேற்றம்
6] கல்வி
7] தாய்மொழி போதனை
8] ஹிந்தித் திணிப்பு
9] சம வேலைக்கு சம ஊதியம்
10] கடல் கடந்த தமிழர்கள்
11] ராணுவச் செலவு வெட்டப் பட வேண்டும்.
மேற்கண்டவைகளுக்காகக் கழகம் பாடுபடுவதுடன் ‘‘சமு தாயத்தில் நிலவும் ஜாதி முறை கேடுகளை ஒழித்துச் ஜாதி களற்ற ஒரு சமுதாயத்தைக் காண் பதற்கும், திராவிட நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உருவாக்க வும்,சமதர்ம குடியரசை காணவும் தொடர்ந்து போராடக் கழகம் உறுதி பூண்டுள்ளது” என முடித்து இருந்தது அவ்வறிக்கை..
இந்தியாவில் முதலில் தேர்தல் அறிக்கை (Election manifesto) வெளி யிட்ட கட்சி தி.மு.கழகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
1957ஆம் ஆண்டு அதன் முதல் தேர்தல் அறிக்கையிலேயே இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல; பர்மிய – மலாயா போன்ற நாடுகளில் பிழைக்கச் சென்ற தமிழ் மக்களுக்கும் சேர்த்தே பேசிய இயக்கம் இது.
அந்த நாடுகளில் குடிமக்களாகப் பதிவு செய்து கொண்டவர்கள் நீங்கலாக, தாய்நாடு திரும்ப விரும்பும் மற்ற அனைவரையும் அழைத்து அவர்களுக்கான வாழ்க்கை பாது காப்பை தேடித்தருவோம் என பதிவு செய்து இருந்தது.
[பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு Tantea அமைப்பையும் ஏற் படுத்தி அவர்களுக்கு உதவியதும் தி.மு.கழகமே]
மேலும் தமிழர் நிறைந்த வெளிநாடுகளில் தமிழர் களையே தூதுவர்களாக நியமிக்கப் படுதல் வேண்டும் என்ற கோரிக்கை யையும் பதிவு செய்து இருந்தது.
முதல் தேர்தல் அறிக்கை வெளிவந்த நாள் : 10.2.1957.
