நெய்வேலி, ஜன. 5- தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவு நாள் மற்றும் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு – கழக பிரச்சார கூட்டம் 3.1.2026 அன்று 6:00 மணி முதல் 9 மணி வரை நெய்வேலி ஆர்ச்சிக்கேட்டு அருகே வடக்குத்து கிளை தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ. தண்ட பாணி, மாவட்ட துணை தலை வர் சி.மணிவேல் மாவட்ட ப .க தலைவர் வீ.வெங்கடேசன் செய லாளர் வி.அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர் கடலூர் மாவட்ட செயலாளர் கவிஞர் க.எழிலேந்தி தொடக்க உரை ஆற்றினார்.
கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் வடலூர் நகரத் தலைவர் சு.இராவணன், அமைப்பாளர் நா. முருகன், மேனாள் இளைஞர் அணி பொறுப்பாளர் கோ.வேலு, மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல், மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.முனியம்மாள், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.தர்மலிங்கம், ஒன்றிய செயலாளர் கந்தசாமி, இரு. ராஜேந்திரன், வடலூர் தீன். மோகன், மருவாய் எ.திருநாவுக்கரசு, வடக்குத்து ப.பாஸ்கர், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, பண்ருட்டி சின்னத்தாய், ஆதினி, அமுதனி, வலசை பெரியார் மணி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் வடக்குத்து கிளை கழக செயலாளர் நூலகர் இரா.கண்ணன் நன்றி கூறினார்.
