புத்தாண்டே வருக! புதுச்சேரியில் விடியலைத் தருக!! கருத்தரங்கம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுச்சேரி, ஜன. 3- புதுச்சேரி மாவட்டக் கழகம் சார்பில் புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதி தலைவர் எஸ். கிருஷ்ணசாமியின் 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

31-12-2025 மாலை 7.00 மணியளவில் புதுச்சேரி, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர் தி. இராசா வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத்  கழகத் தலைவர் வே. அன்பரசன் தலைமை ஏற்று கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் புத்தாண்டில் கழகத்தின் ஒவ்வொரு அணியினரும் மாதம் ஒரு கருத்தரங்கம் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.ச.தினா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணை அமைப்பாளர் வி.இளவரசி சங்கர்,  கழக மேனாள் தலைவர் தெ.தியாகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புத்தாண்டே வருக ! புதுச்சேரியில் விடியலைத் தருக!! என்ற தலைப்பில் புதுச்சேரி மாநிலத்  கழகத் தலைவர் சிவ.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.

அவ்வுரையில் 2025 ஆம் ஆண்டில் புதுச்சேரியில்  கழகச் செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் புதுச்சேரியில் 60 நிகழ்ச்சிகள் நடைபெற்றன, அதில் சிறப்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் நிதி வழங்கு விழா இரண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைக் கொண்டு சிறப்பான விழாக்கள், மூன்று பொதுக்கூட்டம், பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறை, பேச்சுப் போட்டி, ஆர்ப்பாட்டங்கள், நூல்கள் வெளியீடு, பொங்கல் விழா மற்றும் செங்கல்பட்டு மாநாடு, ஆசிரியர் பிறந்தநாள் விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது என விளக்கமாக பேசினார்.

எதிர்வரும் புத்தாண்டில் அயராது உழைத்து திராவிட மாடல் அரசை புதுச்சேரியில் கொண்டுவர முழுவீச்சில் பாடுபட வேண்டும். பெரியார் படிப்பகத்தில் திங்கள் தோறும் கருத்தரங்கம், பொதுவெளியில் கொம்யூன்கள் தோறும் பொதுக் கூட்டம் என நடத்திட வேண்டும் என்றும், வாரம் ஒரு நாள் கழகத் தோழர்கள் இல்லம் சென்று நேரடியாக அவர்களுடன் உரையாடி கழகப் பணியாற்றிடத் தூண்டுதல் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிறைவாக பிறந்தநாள் விழாக் கொண்டாடும் எஸ்.கிருஷ்ணசாமியைப் பாராட்டி பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், அவர் தன்னுடைய 86 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி தெற்குப் பகுதி தலைவர் மு.ஆறுமுகம், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், அரசு ஊழியர் சம்மேளனத் தின் தலைவர். மணித் கோவிந்தராஜ், ஜே.வாசுகி பாலமுருகன், ஜெ.ஜெயந்தி, தனுஷ் செங்கொடி, மணிமாறன், து. தனசேகரன், ஹரிஷ், புண்ணிய கோடி, பெருமாள், சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக எஸ் கிருஷ்ணசாமி சார்பில் நன்றி கூறும் வகையில் வந்திருந்த அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது நிகழ்வில் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் அனைவருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிறப்பு நாட்காட்டியை [2026] வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *