சென்னை, ஜன.1- வடகிழக்கு பருவமழை இயல்பு அளவைகூட எட்ட வில்லை. முன் கூட்டிய கணிப் பெல்லாம் பொய்த்து போனது. சென்னை உள் ளிட்ட பல மாவட்டங்களில் குறைவான மழையே பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை
அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக் கூடிய மழை அள வுதான் வடகிழக்கு பருவமழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. வழக்க மாகவடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 44.2 செ.மீ. என்பது இயல்பான மழைப்பொழிவாக உள்ளது. இதில் அக்டோபரில் 18செ.மீ., நவம்பரில் 17 செ.மீ., டிசம்பரில் 9 செ.மீ. என்பது இயல்பான அளவு ஆகும்.
அதன்படி, நடப்பாண்டில் வடகி ழக்கு பருவமழை தொடங்கி பெய்தது. இதில் அக்டோபரில் 23செ.மீ. பெய்தது. அதாவது இயல்பை விட 36 சதவீதம் அதிகமாக பெய்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக நவம்பரில் 15 செ.மீ.மட்டுமே பெய்தது. இது இயல் பைவிட குறைவு. அதனையடுத்து டிசம் பர் மாதத்தில் வெறும் 4.5 செ.மீ. மழையே இது வரை பெய்துள்ளது.
இயல்பைவிட குறைவு
மொத்தத்தில் இந்த வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 42.8 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இது இயல்பான மழை அளவை விட 3 சதவீதம் குறைவு ஆகும்.
பருவமழை தொடங்குவ தற்கு முன்பு, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும் என முன்கூட்டிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த கணிப்பு எல்லாம் பொய்த்து போய் விட்டது.
கடல்சார்ந்த அலை வுகள் எதுவும் சாதகமாக இல்லாத சூழல் நிலவி யதே இம்மாதத்தில் பருவ மழை குறைவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படு கிறது.
பெரும்பாலான மாவட்டங்களில்…
தமிழ்நாட்டில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, கோவை, தர்மபுரி, திண்டுக் கல், காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தேனி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி யிலும் இயல்பைவிட குறைவாகவே மழை பதிவாகி யுள்ளது.
விருதுநகர், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், திருநெல்வேலி, திருவள் ளூர், தென்காசி, சிவகங்கை, ராணிப் பேட்டை, ராமநாதபுரம், புதுக் கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இயல்பைவிட சற்று அதிகமாக மழை பெய்திருந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து வந்த நிலை மாறி, இயல்பைவிட குறைவாக இந்த ஆண்டு பருவமழை பதிவாகிய வரலாற்றை கொடுத்து விட்டது.
