கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்த பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். சதி செய்கிறது! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.30 – கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீ னப்படுத்த பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி சதி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து முகநூலில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறப் பட்டு இருப்பதாவது:

கல்வி நிறுவனங்கள்

“சமீபத்தில் ‘மாணவர் நாடாளு மன்றத்தில்’ (Students’ Parliament) இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (அய்.எஸ்.அய்.) மாணவர்களைச் சந்தித்தேன். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து எழுப்பி வரும் அதே தீவிரமான கவலைகளை அந்த மாணவர்களும் எழுப்பினர்.

அய்.எஸ்.அய். நிறுவனம் படிப் படியாக ஆர்எஸ்எஸ் மூலம் நிறுவன ரீதியாகக் கையகப்படுத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் தெரி வித்தனர். அய்.எஸ்.அய். என்பது ஏதோ ஒரு சாதாரண நிறுவனம் அல்ல. அது புள்ளியியல், கணிதம், பொருளாதாரம்,தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகிய வற்றில் உயர் மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்கு உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்கியுள்ளது.

பலவீனப்படுத்த சதி திட்டம்

கல்வியாளர்களால் நடத் தப்பட வேண்டிய கல்வி நிறுவ னங்கள் இப்போது அதிகாரத் துவ மற்றும் சித்தாந்தத் தலை யீட்டை எதிர்கொள்கின்றன. பாடத்திட்டமும் ஆராய்ச்சியும் கூட ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இது கல்விச் சீர்திருத்தம் அல்ல, மாறாக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளுவதற்காகவும், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீனப் படுத்துவதற்கான ஒரு சதித்திட்டம். இந்தத் தாக்குதல் நிறுவனங்கள் மீது மட்டுமல்ல, நாட்டின் அறிவுசார் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை மற்றும் அதன் இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட் டோம். கல்விக்கு சுதந்திரம் தேவை  நிறுவனங்கள் சித்தாந்தத்தால் அல்ல, அறிவு மற்றும் அறிவியலால் இயக்கப்படும்.” என்று கூறினார்.

ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், அமெரிக்காவால் விதிக் கப்பட்ட வரிகளின் விளைவாக பதோஹியைச் சேர்ந்த நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினார்.

அவர், “நான் ஏற்ெகனவே கூறியிருந்தேன்  ‘ட்ரம்ப்பின் வரிகள் ஒரு பொருளாதாரப் புயலாக மாறப்போகின்றன, இது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும்.ஆனால் நரேந்திர மோடி அமைதியாக அமர்ந் திருக்கிறார். இன்று, பதோஹி யின் நெசவாளர்கள் அதே எச்சரிக்கையின் யதார்த்தத்தை எடுத்துரைக்கிறார்கள். ஒரு காலத்தில் ‘கம்பள நகரம்’ என்று அழைக்கப்பட்ட பதோஹி, இப்போது அவதூறுக்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்புக் கொள்கை நாட்டின் பல தொழில்களில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தி யுள்ளது. அதனால் பதோஹியின் கம்பளவர்த்தகம் கிட்ட த்தட்ட அழிக்கப்பட்டு விட்டது.

இதன் விளைவாக, ஏற்றுமதி சீராகக் குறைந்து வருகிறது. இந்த வர்த்தகம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடு களுக்கு மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் உண்மை நிலை இதுதான்.” என்று ராகுல் காந்தி கூறினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *