வளர்ச்சித் திசையில் தமிழ்நாடு 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.27- 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து சூரிய சக்தியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நிலக்கரி, காற் றாலை, சூரிய சக்தி, நீர்மின், எரிவாயு, பயோகாஸ் போன்றவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குறிப்பிட தகுந்த ஒன்றாக சோலார் பவர் என்றழைக்கப்படும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம். இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. சூரிய ஒளியை சேகரிக்கும் சோலார் பேனல்கள் மூலம் இந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தை நேரடியாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம் அல்லது மின் கட்டமைப்புக்குள் அனுப்பி மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம். இந்த சோலார் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.

5.08 கோடி யூனிட்
மின் உற்பத்தி

அந்தவகையில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த டிச.23ஆம் தேதி தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் கட்டமைப்புக்குள் 5.08 கோடி யூனிட் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் உச்சபட்சமாக 7,276 மெகாவாட் என்ற அளவையும் எட்டியது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் 4.85 கோடி யூனிட் உற்பத்தியும், ஆகஸ்ட் மாதம் 4.93 கோடி யூனிட் உற்பத்தியும் முதன் மையாக இந்த நிலையில் தற்போது அந்த ரெக்கார்டை உடைக்கும் வகையில் சூரிய சக்தியில் புதிய உச்சத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்திருந்தது.

ஆனால், தற்போது வானம் தெளிவாகவும், வறண்ட வானிலை நிலவுவதாலும், சூரிய மின் உற்பத்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி மட்டும் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 6இல் ஒரு பங்கு, அதாவது சுமார் 345.68 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சூரிய சக்தி பூர்த்தி செய்தது. அன்றைய தினம், நகரங்களிலும் மாவட்டங்களிலும் இதமான வானிலை நிலவியதால், மின் தேவை சுமார் 17,000 மெகாவாட் குறைவாகவே இருந்தது. மேலும் மறுநாள் அதாவது 24ஆம் தேதி சூரிய மின் உற்பத்தி சற்று குறைந்து 47.4 மில்லியன் ஆக இருந்தது. ஆனாலும், மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், இனிவரும் நாட்களில் சூரிய மின் உற்பத்தி இன்னும் அதிகமாகும். மழைக்கான முன்னறிவிப்பு இல்லாத வரை, நல்ல சூரிய மின் உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.

உற்பத்தி செய்யப்படும் அனைத்து பசுமை மின்சாரத்தையும் மின் கட்டமைப்புக்குள் கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டில் தற்போது 10,159.61 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறன் உள்ளது. இதன் மூலம், ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, சூரிய மின் திறனில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு தனது சூரிய மின் உற்பத்தித் திறனில் கூடுதலாக 2,000 மெகாவாட் சேர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *