கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைப்பு அது வழிபாட்டுத் தலமே இல்லை! தாய்லாந்து கொடுத்த விளக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, டிச. 26- கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித் துள்ள தாய்லாந்து இடிக் கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டுத் தலமாக இல்லை. பாதுகாப்பு காரணங் களுக்காகவும் அந்த இடத்தை மேலாண்மை செய்வதற்காகவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

பவுத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என கம்போடியாவும் கூறியிருந்தது.

தாய்லாந்து – கம்போடியா
இடையே மோதல்

தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடி யாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரு நாட்டு படைகளும் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டன.

இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா தலையிட்டு பதற்றத்தை தணித்தது. இருந்தாலும் அவ்வப்போது இருநாடு களுக்கும் இடையே உரசல்கள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில்தான், கடந்த சில வாரங்களாகவே தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் அதிகரித்து வரு கிறது.

விஷ்ணு சிலை இடிப்பு

இரு தரப்புமே எல்லை யில் மாறி மாறித் தாக்குதல் நடத்துவதால், எல்லையில் இருக்கும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலால், இது வரை 86 பேர் உயிரிழந் துள்ளனர். இதற்கு மத்தியில், எல்லையில் கம்போடியாவின் கட்டுப் பாட்டில் உள்ள ஒரு பகுதியை தாய்லாந்து மீட்டது.

தங்களுக்கு சொந்த மான இடம் என உரிமை கோரி வந்த தாய்லாந்து, கம்போடியாவிடம் இருந்து குறிப்பிட்ட அந்த இடத்தை மீட்ட தும், அப்பகுதியில் இருந்த விஷ்ணு சிலை ஒன்றை இடித்தது. இது தொடர்பான காட்சிப் பதிவு இணையத் தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளி டையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்தியா கடும் கண்டனம்

கடந்த 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விஷ்ணு சிலை, தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பவுத்த, இந்து மதத்தின ரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று கம்போடியா கூறியிருந்தது.

விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு இந்தியாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. உலகெங்கிலுமுள்ள பக்தர் களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகை யில் இந்த செயல் இருப்ப தாகவும், இத்தகைய அவமரியாதை செயல்கள் நடப்பதை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது.

தாய்லாந்து விளக்கம்

இந்தியா தனது கவ லையை பதிவு செய்து இருந்த நிலையில், தாய் லாந்து இது தொடர்பாக விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது.

அதில் கூறியிருப்பதா வது: மத நம்பிக்கைகள் மற்றும் புனிதமான இடங்களை அவமதிக் கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அப்பகுதியை மேலாண்மை செய்வதற் காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே மேற்கூறிய நட வடிக்கை எடுக்கப்பட்டது. தாய்லாந்து இறை யாண்மையை நிலை நிறுத்தும் நோக்கத்தில் கம்போடியா கட்டுப் பாட்டில் இருந்த இடம் மீட்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *