தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கழகத் தலைவர் சூளுரை கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற அமைதிப் பேரணி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.24- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி சூளுரை ஏற்கப்பட்டது. கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று (24.12.2025) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் பகுத்தறிவுப் பகலவனின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம்

‘அமைதி ஊர்வலம்’

சென்னையில் அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து கழகத் தோழர், தோழியர்கள் பெரியார் பிஞ்சுகள் பெருந்திரளாக ஒன்றிணைந்து சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து பெரியார் படம் பொறித்த பதாகைகள் ஏந்தி அணிவகுத்த அமைதி ஊர்வலம், சிந்தாதிரிப்பேட்டை வழியே வந்து வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பெரியார் திடலை அடைந்தது.

திராவிடர் கழகம்

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

பின்னர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்குக் கீழே கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி சொல்ல அனைவரும் சூளுரை எடுத்துக்கொண்டனர்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் சூளுரை!

“பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்” என்று நாளும் நிரூபிக்க, இன எதிரிகள், கொள்கை எதிரிகள் ஆகிய பன்முகப் பகைவர்களைக் களத்தில் சந்தித்து, நாளும் களங்காணும் கருஞ்சட்டைப் பாசறையினர் வாள்களாக, கேடயங்களாக சலிப்பின்றி பணியாற்றுவோம்.

தி.மு.க. என்ற ஆளுமை மிகுந்த மக்கள் நல ‘திராவிட மாடல்’ ஆட்சியாக, தமிழ்நாட்டின் தன்மானம், உரிமைகளைத் தலைகுனிய விடாது செய்யும், “எந்நாளும் தமிழ்நாட்டைத்   தலைகுனிய விடமாட்டோம்” என்று சூளுரைக்கும் சுயமரியாதை ஆட்சியாக – இனத்தின் மீட்சியாக நாளும் சரித்திரம் படைத்து வருகிறது. அதனைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில், அதன் கொள்கை எதிரிகளின் கோணல் புத்தி வியூகங்களை அம்பலப்படுத்தி, அறிவுறுத்தி – களத்தில் வாளாகவும், கேடயமாகவும் பணி செய்வோம்.

அய்யா கண்ட மானமும், அறிவும் மங்காது, மறையாது மகத்தான பணி தொடர, 2026ஆம் ஆண்டு தேர்தலில், லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரையாகும்” என கழகத் தலைவர் கூற, அனைவரும் உறுதி ஏற்றனர்.

திராவிடர் கழகம்

நினைவிடத்தில் மரியாதை

தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், திராவிடன் நிதி, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (நிகர்நிலை), பெரியார் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ ஆகிய நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிடர் கழகம்

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழகப் பிரச்சரர செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி,  பசும்பொன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ஓய்வு பெற்ற நீதிபதி இரா.பரஞ்ஜோதி, சட்டமன்ற மேனாள் செயலாளர் மா.செல்வராஜ்,  டாக்டர் ஆர்.மீனாம்பாள், டாக்டர் தர்சினி ஆனந்த், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் களம் இறைவி, க.பெரியார் செல்வி, க.அன்புமதி, க.அருள்மதி, த.இந்துமதி, பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், மீன்சுருட்டி திலீபன், மதுரை பால்ராஜ், கவிஞர் கண்மதியன், சி.காமராஜ், வி.சி.வில்வம், முனைவர் ஜெயக்குமார், பத்திகையாளர்கள் அண்ணாதுரை, தொழில் உலகம் விஜயகுமார், முனைவர் அன்பழகன், அமுதரசன், த.மரகதமணி, சி.அமலசுந்தரி, சி.மெர்சி ஆஞசனாமேரி, ஜா.மதனராணி, டி.இளவரசி, டி.திராவிட இலக்கியா, டி.திராவிட எழில், டி.யாழ்தமிழ், செ.பெ.தொண்டறம், தேவ.நர்மதா, சி.லிங்கச்செல்வி மற்றும் திராளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் நினை நாள் நிகழ்வு, அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றோர்:

திராவிடர் கழகம்

வடசென்னை

வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, ப.கோபாலகிருஷ்ணன், கண்மணி துரை, வ.தமிழ்ச்செல்வன், ஓட்டேரி சி.பாஸ்கர், டி.ஜி.அரசு, என்.டி.சீனிவாசன், வ.கலைச்செல்வன்.

திராவிடர் கழகம்

தென்சென்னை

இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, கோ.வீர.ராகவன், அரும்பாக்கம் தாமோதிரன், டி.ஆர்.சேதுராமன், கரு.அண்ணாதுரை, மு.சேகர், தரமணி ம.ராஜு, நல்.இராமச்சந்திரன், சூளைமேடு இராஜேந்திரன் (எம்.டி.சி.), ச.மகேந்திரன், பெரியார் இனியன், பெரியார் ஆதவன், ஆட்டோ சேகர், டெய்லர் கண்ணன், அய்ஸ் அவுஸ் அ.அன்பு, அமைந்தகரை மோகன், மூவேந்தன், சரவணன், ஜெயசீலன், மந்தவெளி மாரிமுத்து.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

ஆவடி மாவட்டம்

கார்வேந்தன், இளவரசு, மு.ரகுபதி, க.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், பூவை.செல்வி, தொண்டறம், பெரியார் மாணாக்கன், இ.தமிழ்மணி, இரண்யன், அய்.சரவணன், அ.வெ.நடராசன், ச.கார்த்தின், மோகனபிரியா, பெரியார் ராஜேந்திரன், பாடி ராவணன், முகப்பேர் முரளி, செல்வி, அண்ணாதுரை, சமத்துவமணி, கி.ஏழுமலை.

திராவிடர் கழகம்

தாம்பரம் மாவட்டம்

முத்தையன், நாத்திகன், மோகன்ராஜ், குணசேகரன், கதிர்வேல், கரும்பையா, மீனாம்பாள், ராமண்ணா, நாகவள்ளி, உத்ரா, நூர்ஜகான், கரிகாலன், சன் சரவணன்.

திராவிடர் கழகம்

பெரியார் நூலக வாசகர் வட்டம்

தென்மாறன், ஜனார்த்தனன், செல்லப்பன், சோமசுந்தரம், இளவழகன், ஊரப்பாக்கம் ராமண்ணா.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்

புழல் ஆனந்தன், ஓவியர் சனாதிபதி, வடகரை உதயகுமார், வடகரை ஜெகத் விசயகுமார், விசயக்குமார், பா.சக்ரவத்தி, கெஜேந்திரன்.

திருவொற்றியூர் – சோழிங்கநல்லூர் மாவட்டம்

திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன். சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *