தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை குறைத்தது ஒன்றிய அரசு

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அமைச்சர் அர.சக்கரபாணி குற்றச்சாட்டு

அரசியல், தமிழ்நாடு

சென்னை, ஏப்.29 தமிழ் நாட்டுக்கு நியாய விலைக் கடைகளில் பொது மக்க ளுக்கு வழங்கப்படும், கோதுமை ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மெட்ரிக் டன்னை ஒன்றிய அரசு திடீரென குறைத்து விட் டது. இதே போல் மண் ணெண்ணெய் ஒதுக்கீடு அளவையும் ஒன்றிய அரசு குறைத்து விட்ட தாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டி யுள்ளார்.

தமிழ்நாடு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை, தலைமை செயல கத்தில் செய்தியாளர்களிடம் 27.4.2023 அன்று கூறிய தாவது: சர்க்கரை, உளுந் தம் பருப்பு, பாமாயில், மைதா மாவு, ரவை உள்ளிட்ட 5 வகையான பொருட்களை பொதுசந்தைகளில் விலைக்கு வாங்கி ஏழை, எளிய மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் கலைஞர் தலை மையிலான அரசு வழங்கி யது. ஆனால், இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் உளுந்தம் பருப்பு, ரவை வழங் கும் அளவை குறைத்து விட்டனர்.

தற்போது நிதி நெருக் கடி மற்றும் பொருளா தார நெருக்கடி இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்க ளுக்கு துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்கள் எல் லாம் வழங்கப்பட்டு வருகி றது. தமிழ்நாடு அரசு கட் டுப்பாட்டில் சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட் டவைகளை மக்களுக்கு தேவையான அளவு கொடுத்து வருகிறோம்.

மண்ணெண்ணெய் மட்டுமல்ல, ஒன்றிய அர சால் தமிழ்நாட்டுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மாதந் தோறும் 13,485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மே 2021 முதல் மாதம் ஒன்றுக்கு 30,647 டன் ஒதுக்கீடு செய்யப்பட் டது.

ஆனால், ஜூன் 2022 முதல் மாதம் ஒன்றுக்கு 8,532 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், அரிசிக்கு பதிலாக கோதுமை வேண்டும் என்று கேட்டால் கொடுக்க முடிய வில்லை. இப்போது, நாங் கள் ஒன்றிய அரசுக்கு மாதம்தோறும் 15,000 மெட்ரிக் டன் கூடுதலாக கோதுமை ஒதுக்கீடு வேண் டும் என்று கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஒன்றிய அரசு நியாய விலைக் கடைகளில் வழங்கு வதற்கான மண்ணெண் ணெய் ஒதுக்கீட்டை குறைத்து உள்ளது. தமிழ் நாட்டை பொறுத்தவரை விலையில்லாமல் 30 லட் சம் பேருக்கு சமையல் எரி வாயு கொடுத்த காரணத் தினால்தான், மண்எண் ணெய் ஒதுக்கீட்டை குறைத்திருக்கிறார்கள்.

அதேநேரம், மற்ற மாநிலங்களில் சமையல் எரிவாயு இணைப்பு கொடுத் தாலும், அங்கெல்லாம் மண் எண்ணெய் கூடுதலாக கொடுக் கப்பட்டு வரு கிறது. 

ஆனால், தமிழ்நாடு இன்று வஞ்சிக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் ஒன்றிய அரசு, மண்எண்ணெய் அளவை அதிகரித்து தர வேண்டும்.திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவுத் துறையில் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ஒரு நெல் மணி கூட மழையில் நனையக் கூடாது என்று முதல மைச்சர் உத்தரவிட் டுள்ளார்.

நெல் வாங்கினால் அதை அரைத்து பொது மக்களுக்கு தரமான அரிசியாக கொடுக்க வேண் டும் என்று கூறியுள்ளார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 376 அரவை ஆலைகளை 747 அரைவை ஆலைகளாக நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். அனைத்து ஆலைகளிலும் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று உத்த ரவிடப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத் தில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

2021_-2022ஆம் ஆண்டு 43 லட்சம் மெட் ரிக் டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 35 லட்சத்து 50 ஆயிரம் நெல் கொள்முதல் செய்யப் பட்டது. வருகின்ற செப் டம்பர் மாதம் முடிவதற் குள் 45 லட்சம் மெட்ரிக் டன் அதாவது 50 ஆண்டு களில் இல்லாத அளவாக நெல் கொள்முதல் செய் யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *