மும்பை, டிச.19 மகாராட்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே (29). இவருக்குச் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு வட்டியாக மட்டும் இதுவரை ரூ. 7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் இன்னும் முடியவில்லை எனக் கூறி கந்து வட்டிக்காரர்கள் அவரை மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்து விடும்படி கந்து வட்டிக் காரர்களே யோசனை கூறியுள்ளனர். வேறு வழியின்றி அவரும் தனது சிறுநீரகத்தை விற்று விட்டார்.
இதனால் மன உளைச் சலுக்கு ஆளான ரோஷன், சந்திரபூரின் பிரம்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கந்து வட்டிக்காரர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், மனித உறுப்பு கடத்தல் மற்றும் சட்டவிரோத கடன் வசூல் ஆகிய கோணங் களில் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, சிறு நீரகத்தை விற்க இணைய தளத்தில் ரோஷன் தகவல் தேடியுள்ளார். அதன் மூலம் முகவர் ஒருவர் தொடர்பு கொண்டு, ரோஷனை கொல் கத்தாவுக்கு அழைத் துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவப் பரிசோத னைகள் முடிந்த பின்னர், அவரை கம்போடியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு ரோஷனின் சிறுநீரகம் அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டுள் ளது. இந்த வழக்கில் சந் திரபூரின் கந்து வட்டிக் காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதேபோல், மகா ராஷ்டிராவில் வேறு விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
